நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசியாவிற்கு போதைப்பொருள் கடத்திய விமானி சம்பந்தப்பட்ட வழக்கில் 6 பேரை போலிஸ் கைது செய்தது: டத்தோ ஹுசைன்

ஷாஆலம்:

இந்தோனேசியாவின் விமான நிலையத்தில் மலேசிய துணை விமானி சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை ஜூலை 29 அன்று ஆறு உள்ளூர் நபர்களைக் கைது செய்தது.

ஆகஸ்ட் 11 முதல் 15 வரை ஜாககர்த்தாவிற்கு அனுப்பப்பட்ட அதிகாரிகள் குழு, 39 வயதான துணை விமானியிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட விமானிக்கு போதைப்பொருள் விநியோகஸ்தர்களாகவும், அனுப்புபவர்களாகவும் இருந்ததற்காக அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்ற புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் தெரிவித்தார்.

23 முதல் 50 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும், ஆகஸ்ட் 20 முதல் 28 வரை அதிகாரிகள் நடத்திய ஒரு சிறப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகள் மற்றும் உளவுத் தகவல்களின் அடிப்படையில், இந்த நபர்கள் துணை விமானியை உள்ளடக்கிய போதைப்பொருள் கடத்தல் கும்பலில் உயர் தலைவர்கள்,  கீழ்நிலை ஊழியர்கள் எனப் பங்கு வகித்தது கண்டறியப்பட்டது.

தற்போது மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேலும் அவர்கள் அனைவரும் 1985 ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப்பொருள் சிறப்புத் தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset