நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாஸ் கட்சியின் முக்தமார் கூட்டத்தில் ஜாஹிட்டிற்குப் பதிலாக அம்னோவைச் சேர்ந்த அஷ்ராஃப் வஜ்டி பங்கேற்பு 

பெங்காலான் செப்பா: 

பாஸ் கட்சியின் 72ஆவது முக்தமார் கூட்டத்தில் அம்னோ கட்சியின் தலைமை செயலாளர் அஷ்ராஃப் வஜ்டி டுசுக்கி டத்தோஶ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடிக்கு பதிலாக கலந்து கொண்டார் 

மேலும், கிளாந்தான் மாநில அம்னோ தலைவர் அஹ்மத் ஜஸ்லான் யாகுப், சில அம்னோவைச் சேர்ந்த உச்சமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 

அதேவேளையில் பாஸ் கட்சியின் ஆண்டு கூட்டத்தில் வாவாசான் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ ஹம்சா சைனுடின் அவர்களும் கலந்து கொண்டார். 

அம்னோ தேசிய தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி கலந்து கொள்ளவிருப்பதாக சொல்லப்பட்ட இந்த கூட்டத்தில் இறுதி நிமிடத்தில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. 

இதற்கு முன் கடந்த 2019ஆம் ஆண்டில் பாஸ் கட்சி கூட்டத்திற்கு அம்னோவின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

அப்போது அம்னோவைச் சேர்ந்த துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset