நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல பிலாவில் மூன்று இளம் பெண்கள் சண்டையிட்டது குறித்து போலிசார் விசாரணை

கோல பிலா:

சமூக ஊடகங்களில் வைரலான, இங்குள்ள டத்தாரான் மெலாங் பகுதியில் மூன்று இளம் பெண்கள் சண்டையிட்டது தொடர்பாக போலிசாருக்கு புகார் கிடைத்துள்ளது.

 ஆக இது துகுறித்து விசாரணை நடத்தி வருவதாக கோல பிலா மாவட்ட போலிஸ் தலைவர் முஹம்மது முஸ்தபா ஹுசைன் கூறினார்.

கடந்த புதன்கிழமை இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்கு ஒரு புகார் வந்ததாகக் கூறினார்.

இந்தச் சம்பவத்தில், 15 வயது மாணவி ஒருவர் தனது சகோதரருடன் இரண்டு அறிமுகமானவர்களைச் சந்திக்க டத்தாரான் மெலாங்கிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் அவரது புகைப்படம் பரப்பப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட தவறான புரிதல் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காகவே இந்தச் சந்திப்பு நடைபெற்றது எனத் தெரியவருகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset