நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடுக்குமாடி குடியிருப்பின் 22ஆவது மாடியில் இருந்து விழுந்து தனியார் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்

கோலாலம்பூர்:

அடுக்குமாடி குடியிருப்பின் 22ஆவது மாடியில் இருந்து இன்று விழுந்து ஒரு தனியார் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் இங்குள்ள ஸ்தாப்பாக், ஜாலான் லங்காவியில் நிகழ்ந்ததாக வாங்சா மஜு போலிஸ் தலைவர் அன்னாஸ் சுலைமான் கூறினார்.

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகம் தனியார் கல்லூரி மாணவர்களுக்கான தங்குமிடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

கல்லூரியில் முதலாம் செமஸ்டர் மாணவராக இருந்த அந்த மாணவர், காலை 7.07 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்ததை பார்த்ததாக அவர் கூறினார்.

சுமார் காலை 8.50 மணியளவில், ஒரு பாதுகாப்பு ஊழியரிடமிருந்து இந்தச் சம்பவம் குறித்து போலிசாருக்கு தகவல் கிடைத்தது.

முதற்கட்ட விசாரணைகள், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், பாதிக்கப்பட்டவர் காலை 7.07 மணிக்கு அந்த இல்லத்திற்கு வந்ததாகவும், பின்னர் 22ஆவது மாடியில் உள்ள நடைபாதையில் இருந்து கீழே விழுந்ததாகவும் தெரியவந்துள்ளது, என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

18 வயதான அந்தப் பாதிக்கப்பட்டவர், அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாகவும், சம்பவ இடத்திலேயே மருத்துவ அதிகாரிகளால் அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset