செய்திகள் மலேசியா
கோபமில்லை, சூடாக உள்ளேன்; குத்தகையாளர்களுக்கு தாமதமான பணப் பட்டுவாடா பிரச்சினை: டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் கண்டனம்
கோலாலம்பூர்:
நான் கோபமாக இல்லை, ஆனால் நான் சற்றுக் சூடாக இருக்கிறேன்.
தனது அமைச்சகத்தின் கீழ் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தும் ஒப்பந்ததாரர்களுக்குத் தாமதமாகப் பணம் வழங்கப்படும் பிரச்சினை குறித்து, கிராமப்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி இவ்வாறு கூறினார்.
கிராமப்புற சாலை திட்டங்கள் உட்பட, திட்டமிட்டபடி பணிகளை முடித்து முன்னேற்றத்தை அடைந்த ஒப்பந்ததாரர்கள், அமைச்சை குறை சொல்லும் அளவிற்குத் தாமதமான பணப் பட்டுவாடா பிரச்சினைகளை இன்னும் சந்தித்து வருவதாக அவர் கூறினார்.
காரணம் எங்களிடம் தெரிவிக்கப்படாததால் எங்களுக்குப் பணம் கிடைப்பதில்லை.
ஆனால் நாங்கள் அடிக்கடி குறை சொல்லப்படுகிறோம்.
தணிக்கைகள் எங்கள் திட்டங்கள் தாமதமாவதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டும். பொதுக் கணக்குக் குழுவும் தாமதத்திற்குக் காரணம் என்று எங்களைக் குறை சொல்லும்.
நாங்கள் திறமையானவர்கள், நாங்கள் சரியான நேரத்தில் செயல்படுகிறோம், நாங்கள் வேகமாகச் செயல்படுகிறோம்.
ஆனால் அவர்கள் பணம் செலுத்தவில்லை என்றால், நாங்கள் எப்படிச் செலுத்துவோம்? எத்தனை ஒப்பந்தக்காரர்கள் தங்கள் தொழிலை மூடிவிட்டனர்? மூலப்பொருள் வழங்குநர்களால் எத்தனை பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது? எத்தனை துணை ஒப்பந்தக்காரர்கள், ஒப்பந்தக்காரர்கள் மீது வழக்குத் தொடுக்கின்றனர்? அமைச்சின் மீது பழி சுமத்தப்படுகிறது.
ஆனால் இதற்குக் காரணம் வேறு யாரோ என்று டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 1, 2026, 1:36 pm
திருநங்கைகள் அழகுப் போட்டியில் பங்கேற்ற மலேசியரை சமய விவகாரத் துறை அமைச்சர் கண்டித்தார்
September 1, 2026, 12:45 pm
அம்னோ பொதுப் பேரவையில் பாஸ் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்: தக்கியூடின் உறுதிப்படுத்தினார்
September 1, 2026, 12:37 pm
இன்று முதல் செப்டம்பர் 7 வரை அடையாள அட்டை அச்சிடும் பணிகளில் தற்காலிக இடையூறு ஏற்படும்: பதிவிலாகா அறிவிப்பு
September 1, 2026, 11:09 am
ஆறு மாதங்களில் 2 லட்சம் வங்காளதேச தொழிலாளர்களை மலேசியா பணியமர்த்துகிறது
September 1, 2026, 10:45 am
செந்தோசாவில் 69வது சுதந்திர தினக் கொண்டாட்டம்; ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்: குணராஜ்
September 1, 2026, 10:05 am
குவந்தான் அருகே பயங்கர விபத்து: 11 வாகனங்கள் மோதியதில் நால்வர் பலி
September 1, 2026, 9:51 am
தேசிய தினக் கொண்டாட்டத்தில் திரைக்குப் பின்னாலிருந்த நாயகர்களை ஃபஹ்மி பாராட்டினார்
August 31, 2026, 10:39 pm
