செய்திகள் மலேசியா
இன்று முதல் செப்டம்பர் 7 வரை அடையாள அட்டை அச்சிடும் பணிகளில் தற்காலிக இடையூறு ஏற்படும்: பதிவிலாகா அறிவிப்பு
புத்ராஜெயா:
தேசியப் பதிவு இலாகா தற்போதுள்ள அடையாள அட்டை கட்டமைப்பிலிருந்து புதிய தலைமுறை அடையாள அட்டைக்கு மாறும் ஒரு மாற்றச் செயல்பாட்டில் உள்ளது.
இதனால் நாடு தழுவிய அடையாள அட்டை அச்சிடும் செயல்பாடுகளில் தற்காலிக இடையூறு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடையாள அட்டை அச்சிடும் செயல்பாடுகளில் ஏற்படும் இந்தத் தற்காலிக இடையூறு, இன்று தொடங்கி செப்டம்பர் 7 வரை நீடிக்கும் என தேசியப் பதிவு இலாகா இன்று ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தங்களது அடையாள அட்டையை மாற்றவோ அல்லது பதிலீடு செய்யவோ அவசரத் தேவை இல்லாத பொதுமக்கள், இந்தக் காலகட்டத்தில் அவ்விஷயத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு தேசியப் பதிவு இலாகா அறிவுறுத்துகிறது.
12 வயதுடைய குழந்தைகளின் முதல் அடையாள அட்டை விண்ணப்பங்களைப் பொறுத்தவரை, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள், எதிர்காலத்தில் புதிய தலைமுறை அடையாள அட்டை வழங்கல் தொடங்கும் போது, அக் குழந்தை அதைப் பெறுவதற்குச் சிறிது காலம் காத்திருக்குமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கை கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 1, 2026, 12:54 pm
கோபமில்லை, சூடாக உள்ளேன்; குத்தகையாளர்களுக்கு தாமதமான பணப் பட்டுவாடா பிரச்சினை: டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் கண்டனம்
September 1, 2026, 12:45 pm
அம்னோ பொதுப் பேரவையில் பாஸ் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்: தக்கியூடின் உறுதிப்படுத்தினார்
September 1, 2026, 11:09 am
ஆறு மாதங்களில் 2 லட்சம் வங்காளதேச தொழிலாளர்களை மலேசியா பணியமர்த்துகிறது
September 1, 2026, 10:45 am
செந்தோசாவில் 69வது சுதந்திர தினக் கொண்டாட்டம்; ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்: குணராஜ்
September 1, 2026, 10:05 am
குவந்தான் அருகே பயங்கர விபத்து: 11 வாகனங்கள் மோதியதில் நால்வர் பலி
September 1, 2026, 9:51 am
தேசிய தினக் கொண்டாட்டத்தில் திரைக்குப் பின்னாலிருந்த நாயகர்களை ஃபஹ்மி பாராட்டினார்
August 31, 2026, 10:39 pm
சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு முன்னாள் பிரதமர்களை அழைக்கும் வழக்கம் இல்லை
August 31, 2026, 10:37 pm
