நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3 மாணவிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ஆசிரியருக்கு RM16,000 அபராதம்: தண்டனையை மறுபரிசீலனை செய்ய வழக்கறிஞர்கள் கோரிக்கை

கோலாலம்பூர்:

மூன்று மாணவிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதற்காக ஒரு இடைநிலைப் பள்ளி ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட 16,000 ரிங்கிட் அபராதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இரண்டு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எஸ்.என். நாயர், வி. கோகிலா வாணி ஆகியோர், ஆசிரியர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டது தண்டனைக் குறைப்பிற்கு ஒரு காரணமாக இருந்தாலும், குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கவும் அவர்களின் நலனைக் கவனித்துக் கொள்ளவும் பொறுப்பேற்ற ஒருவரால் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றத்தின் தீவிரத்தை அதனால் ஈடுசெய்ய முடியாது என்று கூறினர்.

16,000 ரிங்கிட் அபராதம் மிகவும் கவலையளிப்பதாகவும், விகிதாசாரமற்றதாகவும், போதுமானதாக இல்லாததாகவும் உள்ளது என நாயர் விவரித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள், ஆசிரியரின் பராமரிப்பு, அதிகாரத்தின் கீழ் இருந்த, உதவியற்ற, பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்த 14, 15, 16 வயதுடைய மூன்று மாணவிகள் ஆவர்.

ஒரு மாணவியின் கண்ணியத்தை மீறும் வகையில் குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தி, ஒரு ஆசிரியர் அந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தும்போது, ​​விதிக்கப்படும் தண்டனையானது, தண்டனை, தடுப்பு, கண்டனம், பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் பாதுகாப்பு ஆகிய கொள்கைகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

சட்டத்தின்படி, 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இந்தத் தண்டனைகளில் ஏதேனும் இரண்டை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

வழக்கறிஞர் சங்க உறுப்பினர் வி. கோகில வாணி, விதிக்கப்பட்ட தண்டனை நீதிமன்றத்தின் அதிகார வரம்பு, விருப்புரிமைக்கு உட்பட்டதாக இருந்தாலும், அது மிகவும் மென்மையானதாகவும், தடுப்புக் காரணங்கள் அற்றதாகவும் தோன்றுகிறது.

இது இரண்டு வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட வழக்கு அல்ல.  அந்த மாணவர் அவரது மேற்பார்வையின் கீழ் இருந்தார். 

நீதிமன்றம் தடுப்பு அம்சங்களைக் கருத்தில் கொள்ளும்போது, ​​அந்தப் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதற்கும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset