நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு முன்னாள் பிரதமர்களை அழைக்கும் வழக்கம் இல்லை

புத்ராஜெயா:

2018ஆம் ஆண்டு முதல் தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு முன்னாள் பிரதமர்களைத் தானாகவே அழைக்கும் வழக்கம் இல்லை.

தகவல் தொடர்பு அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோ அப்துல் ஹலிம் ஹம்ஸா இதனை விளக்கினார்.

தேசிய தினம், மலேசியா தினம் 2026 கொண்டாட்டப் பணிக் குழுவின் தலைவராகவும் உள்ள அவர்,

இன்று திங்கள்கிழமை காலை டத்தாரான் புத்ராஜயாவில் நடைபெற்ற 2026 தேசிய தினக் கொண்டாட்ட விழாவில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கலந்துகொண்டது குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக இதை விளக்கினார்.

இது தொடர்பாக, கூட்டரசு அரசாங்கத்தின் முக்கிய அதிகாரப்பூர்வ நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்களை நிர்வகிக்கும் பிரதமர் துறையின் விழாக்கள், சர்வதேச மாநாட்டுச் செயலகப் பிரிவின்  உறுதிப்படுத்தலின் அடிப்படையில், தேசிய தினக் கொண்டாட்டத்திற்கான அழைப்பிதழ் மேலாண்மை நடைமுறைகள் நடைமுறையில் உள்ளன என்பதைச் செயலகம் தெளிவுபடுத்த விரும்புகிறது.

இருப்பினும், எந்தவொரு முன்னாள் தலைவரின் வருகையும் தடுக்கப்படவில்லை.

மேலும் அதிகாரப்பூர்வ அழைப்பிதழ்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள், மேலாண்மைக்கு இணங்க, சம்பந்தப்பட்ட தரப்பினரின் விண்ணப்பத்தின் மூலம் அதை நிர்வகிக்க முடியும்.என்று அவர் ஒரு அறிக்கையில் விளக்கினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset