நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ராஜெயா சுதந்திர தின கொண்டாட்டங்களில் துன் மகாதீர் பங்கேற்றார்

புத்ராஜெயா:

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று டத்தாரான் புத்ராஜெயாவில் நடைபெற்ற 2026 தேசிய தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார்.

@chedetofficial என்ற டிக்டாக் கணக்கில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட காணொளியில், 101 வயதான அந்த அரசியல்வாதி, மின்சார சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி பார்வையாளர்களைப் பார்த்து கையசைப்பது காணப்பட்டது.

துன் மகாதீர் பார்வையாளர்களை வாழ்த்தினார்.

அதே நேரத்தில் சில பாதுகாப்புப் பணியாளர்களும் பார்வையாளர்களும் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

மேலும், அவர் தனது முதல் பதவிக்காலத்தில் 1981 முதல் 2003 வரையிலும், இரண்டாவது பதவிக்காலத்தில் 2018 முதல் 2020 வரையிலும் மலேசியாவின் பிரதமராக இருந்த தனது காலத்தை எடுத்துரைக்கும் ஒரு காணொளியுடன், முகநூலில் ஒரு சுருக்கமான தேசிய தினச் செய்தியையும் பதிவிட்டார்.

மலேசியாவின் சுதந்திர தின, 69ஆவது தேசிய தின வாழ்த்துக்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset