நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலையாள சமூகத்தினர் அனைவருக்கும் ஓணம் பண்டிகை நல்வாழ்த்துகள்: டத்தோஸ்ரீ சரவணன் ​

கோலாலம்பூர்:

மலையாள மக்களின் மிக முக்கிய அறுவடைத் திருவிழாவான ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் மலேசிய மலையாளச் சமூக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஓணம் நல்வாழ்த்துகளை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

​நமது நாட்டில் பெருமளவில் உற்சாகமாகக் கொண்டாடப்படும் முக்கியப் பண்டிகைகளில் ஓணம் பண்டிகையும் ஒன்றாகும்.

இயற்கை வளம், விவசாயத்தின் சிறப்பு, உழைப்பின் பெருமை, வளமான வாழ்க்கைக்கு நன்றி செலுத்துதல் சமூக ஒற்றுமை போன்ற உன்னத எண்ணங்களையும் நலமிக்கச் செயல்களையும் இளைய தலைமுறையினரிடையே விதைப்பதில் ஓணம் பண்டிகை முக்கியப் பங்கு வகிக்கிறது.

​வாசலில் அழகிய பூக்கோலமிட்டு, வீட்டை அலங்கரித்து, விதவிதமான அறுசுவை உணவுகளைச் சமைத்து நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து கொண்டாடப்படும் இந்நாள், மலேசியர்களின் பிணைப்பையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கும் சிறந்த திருநாளாகும்.

குடும்ப பாசமும் உறவுமுறை அன்பும் மேலும் வலுப்பெறும் இனிய தருணம் இதுவாகும்.

வெவ்வேறு கலாச்சாரமும் பழக்க வழக்கங்களும் கொண்ட பல்லின மக்கள் வாழும் நமது மலேசிய நாட்டில், இத்தகைய கொண்டாட்டங்கள் நம் வாழ்க்கையை இன்னும் வண்ணமயமாக்குவதோடு, நாட்டின் அமைதிக்கும் ஒருமைப்பாட்டிற்கும் வலு சேர்க்கின்றன.

நாடெங்கும் வறுமை நீங்கி வளம் பெருகவும், மக்களின் வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் என்றும் நிலைத்திருக்கவும் வாழ்த்துகிறேன்.

அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சார்ந்த ஓணம் பண்டிகை நல்வாழ்த்துகள் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset