செய்திகள் மலேசியா
போதைப்பொருள் வழக்கின் சந்தேக நபரின் மனைவியிடம் முறைகேடாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் விசாரணை அதிகாரி இடைநீக்கம்: ஐஜிபி
கோலாலம்பூர்:
போதைப்பொருள் வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஒருவரின் மனைவியிடம் முறைகேடாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய, கோலா கிராய் மாவட்ட போலிஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த விசாரணை அதிகாரி ஒருவர், விசாரணையை வெளிப்படையாகவும் முழுமையாகவும் நடத்துவதற்கு ஏதுவாகத் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைக்கு உதவுவதற்காக, தொடர்புடைய பல நபர்கள் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளதாக தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமது காலித் இஸ்மாயில் தெரிவித்தார்.
அதே நேரத்தில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் கிளந்தானைச் சேர்ந்தவர் அல்ல, தற்போது நெகிரி செம்பிலானில் இருப்பதால், விசாரணையை நிறைவு செய்வதற்காக அவரிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பெறத் தனது தரப்பு இன்னும் முயற்சி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
சட்டத்திற்கு எதிரான செயல்களைச் செய்யும் எந்த அதிகாரியுடனும் நான் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்.
போலிசாரின் நேர்மையையும், அதன் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் தொடர்ந்து பேணுவதை உறுதிசெய்ய, சட்டத்தையோ அல்லது படை விதிமுறைகளையோ மீறியதாகக் கண்டறியப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2026, 6:05 pm
ஷாஆலமில் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்த நபர்களை போலிஸ் தேடி வருகிறது
August 26, 2026, 3:39 pm
ஆஸ்திரேலிய சிறுவனுக்குப் பாலியல் தொல்லை: மியன்மார் நாட்டு ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
August 26, 2026, 3:34 pm
ஜாலுர் கெமிலாங் கொடி அனைத்து மலேசிய மக்களின் சொத்தாகும்: சிலாங்கூர் சுல்தான் பெருமிதம்
August 26, 2026, 3:32 pm
