நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் கொண்ட இணைய வர்த்தகத் தளங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது: ஃபஹ்மி

புத்ராஜெயா:

மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமோ அல்லது முகவரியோ இல்லாத இணைய வர்த்தகத் தளங்களுக்கு எதிராகத் தகவல் தொடர்பு அமைச்சும் நிதி அமைச்சும் நடவடிக்கை எடுக்கும்.

பயனீட்டாளர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, இணைய வர்த்தகத் தளங்களின் ஒழுங்குமுறையை வலுப்படுத்தும் அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை என்று தகவல் தொடர்பு அமைச்சரும் அரசாங்க செய்தித் தொடர்பாளருமான டத்தோஶ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

இணைய வர்த்தகத் தளங்களை இயக்குபவர்கள் மற்றும் நேரடி வர்த்தகர்கள் உட்பட பொதுமக்களிடமிருந்து கருத்துக்களையும் புகார்களையும் பெற்ற பிறகு, பிரதமரின் அறிவுறுத்தல்களின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பயனீட்டாளர்கள் எப்போதும் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்ய விரும்புகிறது. நாங்கள் இந்தத் தளத்தை மூட விரும்பவில்லை.

ஆனால் விற்கப்படும் பொருட்கள் நமது நாட்டில் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய விரும்புகிறோம் என்று அவர் தனது வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset