செய்திகள் மலேசியா
ஷாஆலமில் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்த நபர்களை போலிஸ் தேடி வருகிறது
ஷாஆலம்:
ஷாஆலமில் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்த நபர்களை போலிஸ் தேடி வருகிறது.
ஷாஆலம் மாவட்ட போலிஸ் தலைவர் ஷாருடின் சமா கூறினார்.
சமூக ஊடகங்களில் வைரலான பட்டாசு வெடிக்கும் காணொளி தொடர்பாக, புக்கிட் ஜெலுத்தோங் போலிஸ் தலைவருக்கு இன்று புகார் கிடைத்துள்ளது.
விசாரணையில், ஜாலான் பெர்சிம்பங்கன் ஜாலான் ஹம்சா பட்டாசுகளை வெடித்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு குழுவினரை அந்தக் காணொளி காட்டுவது தெரியவந்துள்ளது.
செத்தியா ஆலமில் உள்ள பிளிஸ் கார்டன் இடுகாட்டிற்கு சென்றுகொண்டிருந்த இறுதி ஊர்வலத்தின் போது, நேற்று மாலை 4.22 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பட்டாசு வெடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர்களையும், சம்பவ இடத்தில் இருந்த சாட்சிகளையும் கண்டறியும் விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன, என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
1957ஆம் ஆண்டு வெடிபொருள் சட்டத்தின் 7 ஆம் பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால்,
ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 10,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் ஷாருடின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2026, 3:39 pm
ஆஸ்திரேலிய சிறுவனுக்குப் பாலியல் தொல்லை: மியன்மார் நாட்டு ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
August 26, 2026, 3:34 pm
ஜாலுர் கெமிலாங் கொடி அனைத்து மலேசிய மக்களின் சொத்தாகும்: சிலாங்கூர் சுல்தான் பெருமிதம்
August 26, 2026, 3:32 pm
