நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலுர் கெமிலாங் கொடி அனைத்து மலேசிய மக்களின் சொத்தாகும்: சிலாங்கூர் சுல்தான் பெருமிதம் 

ஷா ஆலாம்: 

ஜாலூர் கெமிலாங் தேசிய கொடி அனைத்து மலேசிய மக்களின் சொத்தாகும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சியாளர் மேன்மை தங்கிய சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா கூறினார் 

மலேசிய மக்கள் இனம், மதம், மொழி, அரசியல் குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தாலும்  ஜாலூர் கெமிலாங் என்று வரும் போது அனைவரும் மலேசியர்கள் தான் என்பதை உணர்த்துகிறது. 

ஜாலூர் கெமிலாங் நமது நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டின் சின்னமாகும். 

இன்று தொடங்கி செப்டம்பர் 17ஆம் தேதி வரை டத்தாரான் சிலாங்கூரில் உள்ள மிக உயரமான கொடி கம்பத்தில் ஜாலூர் கெமிலாங் கொடி பறக்கும் என்று சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா இணக்கம் தெரிவித்தார். 

நாட்டின் ஒற்றுமைக்கு பாடுபடும் மலேசியர்களின் அர்ப்பணிப்புகளை நினைவு கூர்ந்து இந்த தேசிய தினத்தை மலேசியர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset