நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினருக்கு நிகரான பதவிக்கு டத்தோ வி.எஸ். மோகன் நியமனம்: இஸ்மாயில் லசிம்

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினருக்கு நிகரான பதவிக்கு டத்தோ வி.எஸ். மோகன் நியமிக்கப்படவுள்ளார்.

நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோ இஸ்மாயில் லசிம் இதனை அறிவித்தார்.

நெகிகரி செம்பிலான் மாநில அரசாங்கத்தின் ஆட்சிக் குழுவில் இந்திய சமூகத்தின் பிரதிநிதித்துவம் இல்லாத குறையைப் போக்க மந்திரி புசார் அலுவலகத்தில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளது.

விஸ்மா நெகிரியில் நடைபெற்ற வாரந்திர ஆட்சிக்குழு கூட்டத்தில் டத்தோ வி.எஸ். மோகன் இப்பதவிக்கு நியமனம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டது என்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறினார்.

டத்தோ வி.எஸ். மோகனின் பதவியேற்பு நிகழ்வு வரும் செப்டம்பர் 1 தேதியில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் மஇகா போட்டியிட்ட இரு சட்டமன்றத் தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்து.

இருந்த போதிலும் ஆட்சிக் குழு உறுப்பினருக்கு நிகரான பதவி அக்கட்சிக்கு வழங்கப்படும் என மாநில மந்திரி புசார் டத்தோ இஸ்மாயில் லசிம் அறிவித்ததற்கு ஏற்ப இந்த நியமனம் அறிவிக்கப்படுள்ளது.

கடந்த 2008 முதல் 2013 ஆண்டு வரை ஜெரம் பாடாங் சட்டமன்ற உறுப்பினராகவும், மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினராகவும் டத்தோ வி.எஸ். மோகன் பதவி வகித்த அனுபவம் பெற்றுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset