செய்திகள் மலேசியா
புகைமூட்டம் காரணமாக தேசியத் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் மாற்றம் நிகழலாம்: டத்தோஶ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்
கோலாலம்பூர்:
புகைமூட்டம் காரணமாக தேசிய தின கொண்டாட்டம் ரத்து செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நாட்டில் நிலவும் புகைமூட்ட பிரசனையின் காரணமாக இந்நிகழ்ச்சியின் அளவு அல்லது அது நடைபெறும் இடம் மாற்றப்படலாம்,
இந்த தகவலை நாட்டின் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்தார்.
வானிலை கணிப்புகள் மற்றும் அடுத்த சில நாட்களுக்கான புகையின் அளவை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நிகழ்வில் பங்கேற்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். அவர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும்.
தேசிய தினக் கொண்டாட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை. ஆனால் சூழலுக்கு ஏற்ப நிகழ்ச்சியின் அளவை சுருக்குவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.
தற்போதைய திட்டப்படி, தேசிய தின விழா ஆகஸ்ட் 31 காலை 7 மணிக்குத் தொடங்க வேண்டும். இந்த பிரம்மாண்ட விழா புத்ராஜெயா சதுக்கத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2026, 6:05 pm
ஷாஆலமில் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்த நபர்களை போலிஸ் தேடி வருகிறது
August 26, 2026, 3:39 pm
ஆஸ்திரேலிய சிறுவனுக்குப் பாலியல் தொல்லை: மியன்மார் நாட்டு ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
August 26, 2026, 3:34 pm
ஜாலுர் கெமிலாங் கொடி அனைத்து மலேசிய மக்களின் சொத்தாகும்: சிலாங்கூர் சுல்தான் பெருமிதம்
August 26, 2026, 3:32 pm
