செய்திகள் மலேசியா
ஆஸ்திரேலிய சிறுவனுக்குப் பாலியல் தொல்லை: மியன்மார் நாட்டு ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
ஜார்ஜ்டவுன்:
கடந்த வாரம் ஆஸ்திரேலிய நாட்டு சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் மியன்மார் நாட்டு ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இருப்பினும், 30 வயதான அங் பியோ வின் எனும் நபர் தனக்கு எதிரான குற்றங்களை மறுத்து விசாரணை கோரினார்.
குற்றச்சாட்டின் படி வாரோங் பெஞ்சானா, லோரோங் பாரு
எனும் பகுதியில் மியன்மார் நாட்டு ஆடவர் இந்த குற்றத்தைப் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
மலேசியாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் வேலை செய்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் அவர் உள்ளூர் நபரைக் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது
இந்த வழக்கு விசாரணை 2017 சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14 (ஏ) இன் கீழ் வழக்கு விசாரணை செய்யப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை மற்றும் பிரம்படி தண்டனை கிடைக்கும்
குற்றஞ்சாட்டப்பட்ட மியன்மார் நாட்டு ஆடவருக்கு ஜாமின் வழங்க நீதிபதி ஸுரைடா அப்பாஸ் மறுத்துவிட்டார்.
இந்த வழக்கு விசாரணை மற்றும் ஆவணங்களை ஒப்படைப்பதற்காக செப்டம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2026, 6:05 pm
ஷாஆலமில் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்த நபர்களை போலிஸ் தேடி வருகிறது
August 26, 2026, 3:34 pm
ஜாலுர் கெமிலாங் கொடி அனைத்து மலேசிய மக்களின் சொத்தாகும்: சிலாங்கூர் சுல்தான் பெருமிதம்
August 26, 2026, 3:32 pm
