நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் 

கோலாலம்பூர்: 

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாளை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் காலை 9 மணிக்குக் குற்றஞ்சாட்டப்படவுள்ளார் 

மாஜிஸ்டிரெட் நீதிமன்றத்தின் நீதிபதி சுஸானா உசைன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது. 

இஸ்மாயில் சப்ரியின் வழக்கறிஞரான டத்தோ அமர் ஹம்சா அர்ஷத், இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால் அவர் தேசிய இருதய கழகத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இதன் காரணமாக வழக்கு விசாரணை சற்று தாமதமடைந்தது. 

தான் பிரதமராக இருந்த போது அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. 

இதற்கு முன் பல்வேறு நாட்டு நோட்டுகளையும் தங்கக்கட்டிகளையும் எம்.ஏ.சி.சி பறிமுதல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset