செய்திகள் மலேசியா
முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர், நம்பிக்கை கூட்டணி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பல லட்சம் ரிங்கிட் மதிப்பிலான ஒதுக்கீடுகளைத் திருப்பித் தர உத்தரவு: இஸ்மாயில் லசிம்
சிரம்பான்:
முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர், நெகிரி செம்பிலான் நம்பிக்கை கூட்டணி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பல லட்சம் ரிங்கிட் மதிப்பிலான ஒதுக்கீடுகளைத் திருப்பித் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோ இஸ்மாயில் லசிம் இதனை கூறினார்.
கடந்த ஜூன் 5ஆம் தேதி நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம்கலைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து முந்தைய நெகிரி செம்பிலான் அரசாங்கத்தைச் சேர்ந்த மொத்தம் 17 நம்பிக்கை கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு மாநில சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர்களும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்திற்குத் தாங்கள் பெற்ற ஒதுக்கீடுகளைத் திருப்பித் தர வேண்டும்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு சட்டமன்ற அமர்வில் ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான பிரச்சினை எழுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற ஆட்சிக் குழு உறுப்பினர்கல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டத்தோ இஸ்மாயில் லசிம் தெரிவித்தார்.
ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான ஒதுக்கீடுகளில், ஒவ்வொரு முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினரும் 150,000 ரிங்கிட்டை திருப்பித் தர வேண்டும்.
அதே சமயம் 10 வழக்கமான நம்பிக்கை கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களும் இரண்டு சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர்களும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்திற்கான முழு ஒதுக்கீடான 174,000 ரிங்கிட், 150,000 ரிங்கிட்டை முறையே திருப்பித் தர வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2026, 6:05 pm
ஷாஆலமில் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்த நபர்களை போலிஸ் தேடி வருகிறது
August 26, 2026, 3:39 pm
ஆஸ்திரேலிய சிறுவனுக்குப் பாலியல் தொல்லை: மியன்மார் நாட்டு ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
August 26, 2026, 3:34 pm
ஜாலுர் கெமிலாங் கொடி அனைத்து மலேசிய மக்களின் சொத்தாகும்: சிலாங்கூர் சுல்தான் பெருமிதம்
August 26, 2026, 3:32 pm
