செய்திகள் மலேசியா
எங்களுக்கு உரிமை உண்டு, இது அரசு நிலம்; ஆலயம் இடிப்பு தொடர்பான வழக்கை சந்திக்க தயார்: பெர்லிஸ் மந்திரி புசார்
கங்கார்:
கடந்த வியாழக்கிழமை இங்குள்ள புக்கிட் லாகியில் வீரமாகாளியம்மன் ஆலயம் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில தரப்பினர் தாக்கல் செய்ய விரும்பும் எந்தவொரு வழக்கையும் எதிர்கொள்ள பெர்லிஸ் மாநில அரசு தயாராக உள்ளது.
இந்த வழக்கு நடவடிக்கை இயல்பானது. முன்னர் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையைத் தற்காத்துக் கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் மந்திரி புசார் அபு பக்கார் ஹம்சா கூறினார்.
தேசிய நிலச் சட்டத்தின் கீழ், கேள்விக்குட்பட்ட சொத்தின் மீதான முழுமையான உரிமை மாநில அரசுக்கு உள்ளது.
அதை இடிக்கும் முடிவு பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது.
மாநில அரசின் சார்பாக, அந்த ஆலய இடிப்பு தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டால் அதை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எனவே காத்திருப்போம்.
ஏனெனில், மாநில அரசு என்ற முறையில் எங்களுக்கு உரிமை உள்ளது. மேலும் இது எங்கள் நிலம், அரசு நிலம் என்பதால், நாங்கள் அதைப் பாதுகாப்போம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2026, 6:05 pm
ஷாஆலமில் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்த நபர்களை போலிஸ் தேடி வருகிறது
August 26, 2026, 3:39 pm
ஆஸ்திரேலிய சிறுவனுக்குப் பாலியல் தொல்லை: மியன்மார் நாட்டு ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
August 26, 2026, 3:34 pm
ஜாலுர் கெமிலாங் கொடி அனைத்து மலேசிய மக்களின் சொத்தாகும்: சிலாங்கூர் சுல்தான் பெருமிதம்
August 26, 2026, 3:32 pm
