நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

SAMBUTAN KEMERDEKAAN EP 3: ஏன் ஆகஸ்ட் 31ஆம் தேதி சுதந்திர தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டது ? 

கோலாலம்பூர்: 

மலாயா சுதந்திரம் அடைந்து இவ்வாண்டுடன் 69ஆவது ஆண்டைக் கோலாகலமாக கொண்டாடவிருக்கிறது. 

மலாயா கடந்த 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றது 

ஆகஸ்ட் 31 என்ற தேதியானது இஸ்லாமிய அறிஞர் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா ஃபாஹிம் அவர்கள் தேர்ந்தெடுத்து அதனை துங்கு அப்துல் ரஹ்மானிடம் தெரிவித்தார். 

இந்த 31 ஆகஸ்ட் 1957 ஆங்கிலேயர் தரப்பு இணக்கம் தெரிவித்து அதற்கான உறுதிமொழியையும் வழங்கியது. 

அரபுமொழியில் இந்த 31 ஆகஸ்ட் என்பது AM KHIR ATANA அல்லது அனைவருக்குமான இந்த ஆண்டு என்று பொருள்படும். 

ஆகஸ்ட் 31ஆம் தேதி மலாயாவிற்குச் சுதந்திரம் கிடைக்கும் என்று அதிகாரப்பூர்வமாக துங்கு அப்துல் ரஹ்மான் 1956ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி மலாக்கா, பண்டார் ஹிலீர் பாடாங் பஹ்லாவானில் அறிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset