செய்திகள் மலேசியா
மலாக்கா மாநிலத் தேர்தல் உடன்படிக்கைக்காக பெரிகாத்தான் நேஷ்னலும் தேசிய முன்னணியும் ஏற்கனவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன: ஹாதி அவாங்
கோலாலம்பூர்:
வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலுக்காக ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ள, பெரிகாத்தான் நேஷனல் (PN), தேசிய முன்னணி (BN) ஆகியவை ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன என்று பாஸ் கட்சியின் தலைவர் ஹாதி அவாங் கூறினார்.
ஜோகூர், நெகிரி செம்பிலானில் வெற்றிகரமாக அமைந்த கடந்தகால ஒத்துழைப்புகளிலிருந்து உத்வேகம் பெற்ற பாஸ் (PAS) தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாதி அவாங், இந்தப் பேச்சுவார்த்தைகளின் ஆரம்பகட்ட முன்னேற்றம் குறித்து நம்பிக்கை தெரிவித்தார்.
தேர்தல் தேதி இன்னும் நிச்சயமற்றதாக இருந்தாலும், கட்சியின் ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.
மேலும், தொகுதி ஒதுக்கீடு போன்ற விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், தேசிய முன்னணி இடமிருந்து சாதகமான கருத்துக்கள் வந்துள்ளதாக பக்கத்தான் நேஷ்னலின் தலைமைப் பொறுப்பாளர் தக்கியுதீன் ஹசன் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 25, 2026, 12:23 pm
பள்ளிவாசல்கள் தூங்கும் இடங்களாக இருக்கக்கூடாது: சுல்தான் நஸ்ரின்
August 25, 2026, 12:16 pm
2026 மௌலிதுர் ரசூல் முன்னோடி தலைவர் விருதை வெஸ்ட்ஸ்டார் குழும நிறுவனர் டான்ஸ்ரீ சையத் அஸ்மான் பெற்றார்
August 25, 2026, 11:54 am
சூப்பர் எல் நினோ அடுத்த மாதம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது: மெட் மலேசியா
August 25, 2026, 11:30 am
வெளிநாட்டு உடம்பு பிடி பெண்ணுடன் அடுத்தவரின் கணவர் கைது: போலிஸ்
August 25, 2026, 11:00 am
நான் ஜோக்கிங் சென்றபோது ஐ.எஸ். என் நடமாட்டத்தை உளவு பார்த்தது: அயோப் கான்
August 25, 2026, 10:53 am
