செய்திகள் மலேசியா
பள்ளிவாசல்கள் தூங்கும் இடங்களாக இருக்கக்கூடாது: சுல்தான் நஸ்ரின்
ஈப்போ:
பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் முய்ஸுத்தீன் ஷா, மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்களும், சூராவ்க்களும் வெறும் தொழுகைக்கும் சமய வகுப்புகளுக்குமான இடங்களாக மட்டும் இல்லாமல், சமூகத்தில் ஒரு பெரிய பங்கை வகிக்க வேண்டும் என்று பெருமானார் (ஸல்) பிறந்த நாள் தினத்தில் தனது செய்தியாகக் கூறினார்.
பேராக்கில் உள்ள 700 பள்ளிவாசல்களும் 1,773 சூராவ்க்களும் "உறங்கும் யானைகளாக" மாறிவிடக் கூடாது என்றும், மாறாக அவை சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி, அறிவு வளர்ச்சி மற்றும் சமூக-கலாச்சார வளர்ச்சிக்கான மையங்களாகப் புத்துயிர் பெற வேண்டும் என்றும் மாட்சிமை பொருந்திய மன்னர் கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, பள்ளிவாசல்கள் பழைய சிந்தனை முறைகளிலிருந்து விலகி, கல்வி, குடும்ப ஆலோசனை, இளைஞர்களுக்கான செயல்பாடுகள், சமூக, பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களையும் வழங்கும் உம்மாவிற்கான சிறந்த மையங்களாக உருவாக வேண்டும்.
பள்ளிவாசல் செயல்பாடுகள், பாலர் பள்ளி குழந்தைகள், பள்ளி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து வயதினரையும் ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும்.
தங்கள் சமூகங்களில் ஏற்படும் பிரச்சனைகளை நிர்வாக குழுக்கள் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது என்றும் சுல்தான் நஸ்ரின் நினைவூட்டினார்.
சமூகம் எதிர்கொள்ளும் உண்மையான சவால்களுக்கு பள்ளிவாசல்கள் செவிசாய்த்து, அவர்களின் அன்றாட வாழ்க்கையைத் தொடும் விஷயங்களில் உதவ முன்வர வேண்டும் என்று மாட்சிமை பொருந்திய மன்னர் கூறினார்.
சமூகத்தின் கூட்டுப் பங்களிப்பு தேவைப்படும் உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் போன்ற துறைகளிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பள்ளிவாசல்கள் தொழுகை நேரங்களில் மட்டும் உயிர்ப்புடன் இருக்கக் கூடாது, மாறாக, சமூகம் அறிவைப் பெறவும், உதவியைப் பெறவும், மேலும் ஒரு வலுவான சமூகத்தைக் கட்டியெழுப்பவும் ஒரு இடமாக எல்லா நேரங்களிலும் நிலைத்திருக்க வேண்டும் என்ற தெளிவான செய்தியை இந்த ஆணை கொண்டுள்ளது.
- முபாரக் அலி
தொடர்புடைய செய்திகள்
August 25, 2026, 12:16 pm
2026 மௌலிதுர் ரசூல் முன்னோடி தலைவர் விருதை வெஸ்ட்ஸ்டார் குழும நிறுவனர் டான்ஸ்ரீ சையத் அஸ்மான் பெற்றார்
August 25, 2026, 11:54 am
சூப்பர் எல் நினோ அடுத்த மாதம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது: மெட் மலேசியா
August 25, 2026, 11:30 am
வெளிநாட்டு உடம்பு பிடி பெண்ணுடன் அடுத்தவரின் கணவர் கைது: போலிஸ்
August 25, 2026, 11:00 am
நான் ஜோக்கிங் சென்றபோது ஐ.எஸ். என் நடமாட்டத்தை உளவு பார்த்தது: அயோப் கான்
August 25, 2026, 10:53 am
