நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வரலாற்று சிறப்புமிக்க ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் மௌலிதுர் ரசூல் ஊர்வலம்: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்

ஈப்போ:

வரலாற்று சிறப்புமிக்க ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் மௌலிதுர் ரசூல் ஊர்வலம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த தின நாள் உலகெங்கிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பேரா மாநிலம் வரலாற்று சிறப்புமிக்க ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் இன்று மௌலிதுர் ரசூல் திருநாளை முன்னிட்டு ஈப்போ மாநகரில் சுமார் ஆறு கிலோ மீட்டர் ஊர்வலம் காலை 9:00 மணி அளவில் தொடங்கி காலை 10.30 மணியளவில் நிறைவுப் பெற்றது.

இதில் இப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசல் ஜமாத்தார்கள், அதனை சுற்றியுள்ள எல்லா இஸ்லாமியப் பெரியோர்கள் சகோதரர்கள், தாய்மார்கள், சிறுவர், சிறுமிகள் என்று நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வத்துடனும், சந்தோஷத்துடனும், கலந்து கொண்டார்கள்.

அதற்குப் பிறகு இந்த நாட்டில் எல்லா மக்களுக்காக வேண்டியும் பிரார்த்தனை (துவா) செய்யப்பட்டது.

கலந்து கொண்ட அனைவருக்கும் ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசல் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இது ஒன்பதாவது ஆண்டாக சிறப்புடன் நடைபெற்றதாகவிம் ஆண்டு தோறும் இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெறும் என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset