செய்திகள் மலேசியா
பெல்டாவுக்கு கிட்டத்தட்ட 10 பில்லியன் ரிங்கிட் இழப்பு; தணிக்கை முன்மொழிவு அமைச்சரவைக்குக் கொண்டுவரப்படும்: பிரதமர்
செர்டாங்:
பெல்டா நிறுவனம் சந்தித்த இழப்புகளைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் மீது தடயவியல் தணிக்கை நடத்துவதற்கான முன்மொழிவு அமைச்சரவைக்குக் கொண்டுவரப்படும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.
ஃபெல்டாவுக்கு கிட்டத்தட்ட 10 பில்லியன் ரிங்கிட் இழப்பை ஏற்படுத்திய சூத்திரதாரிகளைக் கண்டறியும் இந்த முன்மொழிவை, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி நேற்று முன்வைத்தார்.
அந்த முன்மொழிவை நாங்கள் அமைச்சரவைக்குக் கொண்டு செல்வோம்.
தேசிய அளவிலான மௌலிதுர் ரசூல் அவர்கள் நினைவு நாள் 1448/2026 கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.
பெல்டா சந்தித்த இழப்புகளுக்கான காரணத்தை விசாரணை தெளிவாகக் கண்டறிந்து, பொறுப்பான தரப்பினரையும் அடையாளம் காண வேண்டும் என்று ஜாஹித் கூறினார்.
பெல்டாவை விசாரிக்க ஒரு அரச விசாரணை ஆணையத்தை அமைப்பதற்கும் தான் தயாராக இருப்பதாகக் கூறிய அவர், அது எந்தவொரு தனிநபரைத் துன்புறுத்துவதையோ அல்லது சங்கடப்படுத்துவதையோ நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
ஆக உறுதியான ஆதாரம் இருந்தால், பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 25, 2026, 12:23 pm
பள்ளிவாசல்கள் தூங்கும் இடங்களாக இருக்கக்கூடாது: சுல்தான் நஸ்ரின்
August 25, 2026, 12:16 pm
2026 மௌலிதுர் ரசூல் முன்னோடி தலைவர் விருதை வெஸ்ட்ஸ்டார் குழும நிறுவனர் டான்ஸ்ரீ சையத் அஸ்மான் பெற்றார்
August 25, 2026, 11:54 am
சூப்பர் எல் நினோ அடுத்த மாதம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது: மெட் மலேசியா
August 25, 2026, 11:30 am
வெளிநாட்டு உடம்பு பிடி பெண்ணுடன் அடுத்தவரின் கணவர் கைது: போலிஸ்
August 25, 2026, 11:00 am
நான் ஜோக்கிங் சென்றபோது ஐ.எஸ். என் நடமாட்டத்தை உளவு பார்த்தது: அயோப் கான்
August 25, 2026, 10:53 am
