செய்திகள் மலேசியா
புகைமூட்டத்தால் காற்று மாசுபாடு குறியீடு 100-ஐத் தாண்டினால் பள்ளிகள் வெளிப்புறச் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும்: பினாங்கு கல்வி இலாகா
ஜார்ஜ்டவுன்:
மாநிலத்தில் நிலவும் புகைமூட்டச் சூழலைத் தொடர்ந்து, பினாங்கு மாநிலத்தில் உள்ள பள்ளிகள், 100க்கும் அதிகமான ஆரோக்கியமற்ற காற்று மாசுபாடு குறியீட்டைக் கொண்ட பகுதிகளில், மாணவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து வெளிப்புறச் செயல்பாடுகளையும் நிறுத்த வேண்டும்.
பினாங்கு மாநில கல்வி இலாகா இதனை கூறியது.
காற்றின் தர அளவு 200-ஐத் தாண்டினால், அதாவது மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை அடைந்தால், பள்ளிகளை மூடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
புகைமூட்டத்தை எதிர்கொள்ளும்போது மாணவர்கள், ஆசிரியர்கள், அனைத்து கல்விப் பணியாளர்களின் கவனிப்பு, நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தனது மேற்பார்வையின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களும் எடுக்க வேண்டிய ஆயத்த நடவடிக்கைகளில் இந்த நடவடிக்கையும் ஒன்றாகும்.
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்களும் பள்ளிகளும், புகைமூட்டம் தொடர்பான எச்சரிக்கைகள், தற்போதைய நிலவரங்கள் குறித்து அறிந்திருப்பதோடு, அதிகாரப்பூர்வ சுற்றுச்சூழல் துறை மூலங்கள் வழியாக குறியீடு அளவீடுகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன என்று கல்வி இலாகா கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 25, 2026, 12:23 pm
பள்ளிவாசல்கள் தூங்கும் இடங்களாக இருக்கக்கூடாது: சுல்தான் நஸ்ரின்
August 25, 2026, 12:16 pm
2026 மௌலிதுர் ரசூல் முன்னோடி தலைவர் விருதை வெஸ்ட்ஸ்டார் குழும நிறுவனர் டான்ஸ்ரீ சையத் அஸ்மான் பெற்றார்
August 25, 2026, 11:54 am
சூப்பர் எல் நினோ அடுத்த மாதம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது: மெட் மலேசியா
August 25, 2026, 11:30 am
வெளிநாட்டு உடம்பு பிடி பெண்ணுடன் அடுத்தவரின் கணவர் கைது: போலிஸ்
August 25, 2026, 11:00 am
நான் ஜோக்கிங் சென்றபோது ஐ.எஸ். என் நடமாட்டத்தை உளவு பார்த்தது: அயோப் கான்
August 25, 2026, 10:53 am
