நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான் ஜோக்கிங் சென்றபோது ஐ.எஸ். என் நடமாட்டத்தை உளவு பார்த்தது: அயோப் கான்

கோலாலம்பூர்:

புக்கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவராக இருந்தபோது, ​​எப்போதும் விழிப்புடன் இருப்பது ஒரு பழக்கமாகிவிட்டது.

முன்னாள் துணை போலிஸ்படைத் துணைத் தலைவr டான்ஸ்ரீ அயோப் கான் இதனை கூறினார்.

தாமான் தாசேக் பெர்டானாவில் அவர் ஜோக்கிங் சென்றபோது, ​​யாரோ ஒருவர் தனது நடமாட்டத்தைக் கண்காணித்து வருவதை நான் அறிந்து கொண்டேன்.

மலேசியாவிற்கான இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.) குழுவின் முக்கிய ஒருங்கிணைப்பாளர், பாதுகாப்புப் பணியாளர்களை உளவு பார்க்கவும் கண்காணிக்கவும் சமூக ஊடகங்கள் மூலம் உள்ளூர்வாசிகளை ஆட்சேர்ப்பு செய்து வருவதை  அறிந்து கொண்டேன்.

அவர்கள், அப்போதைய போலிஸ்படைத் தலைவர் உட்பட பல அதிகாரிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்தனர்.

நான் தாமான் தாசேக் பெர்டானாவில் நடைப்பயிற்சி செய்வதையும், அப்போதைய ஐஜிபி டான்ஸ்ரீ காலித் அபு பாக்கர் ஒவ்வொரு சனிக்கிழமையும் மோட்டார் சைக்கிள் வாகன அணிவகுப்பில் இணைவார் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

அவர்களைக் கண்காணிக்க நாங்களும் அந்தக் குழுவில் இருந்ததால் எனக்கு இந்தத் தகவல் கிடைத்தது என்று, போலிஸ் துறையில் 35 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, காவல்துறை துணைத் தலைமைப் பதவியிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற பின்னர் அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.

2016 முதல் 2020 வரை புக்கிட் அமானின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவராக இருந்தபோது, ​​தீவிரவாதக் குழுக்களைக் கலைக்கும், பயங்கரவாதத் தாக்குதல் சதித்திட்டங்களை முறியடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்த அயோப் கான், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அங்கீகாரம் பெற்ற முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset