செய்திகள் மலேசியா
வெளிநாட்டு உடம்பு பிடி பெண்ணுடன் அடுத்தவரின் கணவர் கைது: போலிஸ்
கோத்தா திங்கிட:
ஜொகூர் இஸ்லாமியத் துறை (JAINJ) நேற்று இங்குள்ள பண்டார் பெனாவரில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் நடத்திய சோதனை நடவடிக்கையில், உள்ளாடை மட்டும் அணிந்திருந்த ஓர் ஆண், ஒரு வெளிநாட்டு உடம்பு பிடி பெண்ணுடன் கைது செய்யப்பட்டார்.
அத்துறையின் தகவல்படி, இரவு 10.45 மணிக்கு உடம்பு பிடி நிலையத்தின் அறைகளில் ஒன்றில் அமலாக்க அதிகாரிகள் குழுவினரால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
சோதனையின் போது, 30 வயதுடைய அந்த உள்ளூர் நபர் படுத்திருந்த நிலையில் உள்ளாடை மட்டுமே அணிந்திருந்திருந்தார்.
அவருக்கு அருகில் 30 வயதுகளில் உள்ள இந்தோனேசியப் பெண் அமர்ந்திருந்ததும் தெரியவந்தது.
அந்த அறையில், மெத்தை, விரிப்புகளுடன் கூடிய ஒரு ஒற்றைப் படுக்கை, அந்த நபரின் உடைகள், மசாஜ் எண்ணெய் அடங்கிய பல சிறிய பாட்டில்களும் கண்டெடுக்கப்பட்டன என்று அத் துறை இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
விசாரணையில் அந்த நபர் திருமணமானவர். இந்த மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தவர்.
அதே சமயம் சம்பந்தப்பட்ட பெண் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு அந்த இடத்தில் மசாஜ் செய்பவராகப் பணிபுரிந்து வந்துள்ளார் என தெரியவந்தது.
சம்பந்தப்பட்ட அந்த நபர், தான் இந்த மாவட்டத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து வருவதாகவும், தனது மனைவியும் குழந்தையும் மற்றொரு மாநிலத்தில் இருப்பதாகவும், அங்கு பயணிக்க சுமார் மூன்று மணி நேரம் ஆகும் என்றும் கூறினார்.
மேலும், அவர் வழக்கமாக வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ தனது கிராமத்திற்குத் திரும்புவதாகவும் கூறினார்.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட பெண் கமிஷன் அடிப்படையில் மசாஜ் செய்பவராகப் பணிபுரிவதை ஒப்புக்கொண்டார் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 25, 2026, 12:23 pm
பள்ளிவாசல்கள் தூங்கும் இடங்களாக இருக்கக்கூடாது: சுல்தான் நஸ்ரின்
August 25, 2026, 12:16 pm
2026 மௌலிதுர் ரசூல் முன்னோடி தலைவர் விருதை வெஸ்ட்ஸ்டார் குழும நிறுவனர் டான்ஸ்ரீ சையத் அஸ்மான் பெற்றார்
August 25, 2026, 11:54 am
சூப்பர் எல் நினோ அடுத்த மாதம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது: மெட் மலேசியா
August 25, 2026, 11:00 am
நான் ஜோக்கிங் சென்றபோது ஐ.எஸ். என் நடமாட்டத்தை உளவு பார்த்தது: அயோப் கான்
August 25, 2026, 10:53 am
