செய்திகள் மலேசியா
சிவப்பு மகா காளியம்மன் பேரணி சுவரொட்டிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை: ராயர் மறுப்பு
ஜெலுத்தோங்:
சமூக ஊடகங்கள், குறுஞ்செய்தி செயலிகளில் வைரலான 'சிவப்பு மகா காளியம்மன் பேரணி' சுவரொட்டியைத் தயாரித்தல், வெளியிடுதல் அல்லது விநியோகிப்பதில் தனக்குத் தொடர்பு இல்லை என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் கடுமையாக மறுத்துள்ளார்.
அந்தப் பேரணியில் தானும் ஈடுபட்டிருப்பது, ஆதரவளிப்பது அல்லது அதை ஏற்பாடு செய்வதில் ஒரு பகுதியாக இருப்பது போல, அந்தச் சுவரொட்டியில் தனது பெயர், புகைப்படம், பதவி ஆகியவை இடம்பெற்றிருந்ததாக ராயர் கூறினார்.
சுவரொட்டியின் தயாரிப்பு, வெளியீடு அல்லது விநியோகத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அதனை நான் வன்மையாக மறுக்கிறேன்.
பேரணியை விளம்பரப்படுத்தும் நோக்கத்திற்காக, சுவரொட்டியில் எனது பெயர், புகைப்படம் அல்லது பதவியைப் பயன்படுத்த நான் ஒருபோதும் அனுமதியோ சம்மதமோ அளிக்கவில்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன் என்று அவர் நேற்று இரவு முகநூலில் பதிவிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 25, 2026, 12:23 pm
பள்ளிவாசல்கள் தூங்கும் இடங்களாக இருக்கக்கூடாது: சுல்தான் நஸ்ரின்
August 25, 2026, 12:16 pm
2026 மௌலிதுர் ரசூல் முன்னோடி தலைவர் விருதை வெஸ்ட்ஸ்டார் குழும நிறுவனர் டான்ஸ்ரீ சையத் அஸ்மான் பெற்றார்
August 25, 2026, 11:54 am
சூப்பர் எல் நினோ அடுத்த மாதம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது: மெட் மலேசியா
August 25, 2026, 11:30 am
வெளிநாட்டு உடம்பு பிடி பெண்ணுடன் அடுத்தவரின் கணவர் கைது: போலிஸ்
August 25, 2026, 11:00 am
