நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுக்மா போட்டியில் வென்றதை அடுத்து செப்டம்பர் 1ஆம் தேதி சிலாங்கூர் மாநிலத்திற்கு சிறப்பு பொதுவிடுமுறை: டத்தோஸ்ரீ அமிரூடின் அறிவிப்பு

ஷாஆலம்:

2026 மலேசிய விளையாட்டுப் போட்டிகளில் (சுக்மா) சிலாங்கூர் ஒட்டுமொத்த சாம்பியனாக உருவெடுத்ததை அடுத்து மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி, செப்டம்பர் 1 ஆம் தேதி சிறப்பு விடுமுறையை அறிவித்தார்.

சிலாங்கூர் குழுவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள், தன்னார்வலர்கள், பெற்றோர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

விளையாட்டுப் போட்டிகள் முழுவதும் உதவிய ஒவ்வொரு விளையாட்டு வீரர், அதிகாரி, தன்னார்வலர், பெற்றோருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கும் விதமாக, செப்டம்பர் 1 ஆம் தேதி சிலாங்கூர் மக்களுக்கு சிறப்பு விடுமுறையை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று சுக்மா நிறைவு விழாவில் அவர் கூறினார்.

இவ்விழாவில் சிலாங்கூரின் ராஜா மூடா, தெங்கு அமீர் ஷா சுல்தான் ஷராபுடின், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோரும் உடனிருந்தனர்.

சிலாங்கூர் 101 தங்கப் பதக்கங்கள், 73 வெள்ளி மற்றும் 71 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

அதனைத் தொடர்ந்து கூட்டரசுப் பிரதேசம் 51 தங்கம், 54 வெள்ளி, 51 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

சுக்மா என்பது வெறும் ஒரு விளையாட்டு நிகழ்வு மட்டுமல்ல, அது இளம் விளையாட்டு வீரர்களுக்கு இனம் மற்றும் மதங்களைக் கடந்து தங்கள் கருத்துக்களையும், வாழ்க்கை அனுபவங்களையும் பரிமாறிக்கொள்ளவும், புதிய நட்புறவுகளை உருவாக்கவும் வாய்ப்பளிக்கும் ஒரு நிகழ்வு என்று அமிரூடின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset