
செய்திகள் மலேசியா
போலி கொரோனா சான்றிதழ்: கிளினிக் உரிமையாளர் உட்பட ஆறு பேர் கைது
கோலாலம்பூர்:
போலி கொரோனா சான்றிதழ் தொடர்பாக கோம்பாக் பகுதியில் இயங்கும் சிகிச்சையகத்தின் (கிளினிக்) உரிமையாளர், ஊழியர்கள் உள்ளிட்ட ஏழு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
தொடக்கத்தில் ஒரு போலி சான்றிதழுக்கு மூவாயிரம் வெள்ளி கட்டணம் வசூலித்த இவர்கள், பின்னர் இக் கட்டணத்தை ஐநூறு ரிங்கிட்டாக குறைத்தது தெரியவந்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக இக் கும்பல் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளதாக நேற்று ஷா ஆலமில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சிலாங்கூர் காவல்துறை தலைவர் அர்ஜுனைடி மொஹம்மத் தெரிவித்தார்.
கைதானவர்களில் மூவர் பெண்கள் என்றும், அனைவரும் 20 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும், கணினி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர், சான்றிதழ் கேட்டு வருவோரின் MySejahtera செயலியில் அவர்களுடைய அண்மைய நிலை status குறித்த தகவல்களைப் பெற்று அந்தக் கணினியில் பதிவு செய்து வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
"அந்த கிளினிக் சுகாதார அமைச்சிடம் இருந்து தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது. எனினும் மருந்தை பயன்படுத்தாமல் பின்னர் காலிப் புட்டிகள் மட்டும் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மூலம் போலி தடுப்பூசி சான்றிதழ் அளித்ததை நியாயப்படுத்தும் முயற்சி நடந்துள்ளது. போலிச் சான்றிதழ் முறைகேடு தொடர்பாக இந்தக் கிளினிக் வாட்ஸ்அப் மூலம் பரப்பிய தகவல் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.
"இந்தக் கிளினிக்கில் மொத்தம் 5,601 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக பதிவாகி உள்ளது. இவர்களில் எத்தனை பேர் கொரோனா தடுப்பூசி போடாமலேயே இவ்வாறு பதிவு செய்து கொண்டுள்ளனர் என்பதைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது," என்றார் அர்ஜுனைடி மொஹம்மத் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
October 22, 2025, 6:20 pm
கெஅடிலான் கட்சி பிரிவு கொள்கைகளை நிராகரிப்பதுடன் மடானி கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறது: டத்தோஸ்ரீ ரமணன்
October 22, 2025, 5:48 pm
கூலிமில் நடந்த பட்டாசு வெடிப்பு விபத்துக்கு சட்டவிரோத வானவேடிக்கைகளே காரணம்: உள்துறை அமைச்சு
October 22, 2025, 5:18 pm
போக்குவரத்து சம்மன்கள்: அரசு இறுதியாக 70% வரை தள்ளுபடியை வழங்குகிறது
October 22, 2025, 4:30 pm
ஆசியான் உச்சி நிலை மாநாடு; டிரம்ப் வரும் ஞாயிற்றுக்கிழமை மலேசியா வருகிறார்: ஃபஹ்மி
October 22, 2025, 4:17 pm
மலேசிய தொழிலாளர்களுக்கு புதிய பயிற்சி தளத்தை மனிதவள அமைச்சு உருவாக்குகிறது: ஸ்டீவன் சிம்
October 22, 2025, 3:47 pm
இந்த வட்டாரத்தின் சிறந்த மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் : ஐஎல்ஓ இயக்குநர் பாராட்டு
October 22, 2025, 2:50 pm