நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

5 வயதில் பாலர் பள்ளி கல்வி; முதலாம் ஆண்டு வகுப்பு 6 வயதில் தொடங்கும்: பிரதமர் அறிவிப்பு

புத்ராஜெயா:

2027ஆம் ஆண்டு முதல், பாலர் கல்வி ஐந்து வயதிலும், முதலாம் ஆண்டு வகுப்பு ஆறு வயதிலும் தொடங்கும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை அறிவித்தார்.

அடுத்த ஆண்டு தொடங்கி.பாலர் கல்வி ஐந்து வயதில் தொடங்கும். அதே நேரத்தில் முதலாம் ஆண்டு கல்வி ஆறு வயதில் தொடங்கும்.

ஆனால் இந்த மாற்றங்கள் பெற்றோருக்கு இன்னும் கட்டாயமில்லை.

புதிய கல்விச் சூழலுக்கு, குறிப்பாக கல்வியாளர்களுக்குத் தயாராக இடம் அளிக்க வேண்டும்.

இதன் பொருள் அடுத்த ஆண்டு தொடங்கி அதை கட்டாயமாக்க நாங்கள் தயாராக இல்லை.

ஏனெனில் தங்கள் குழந்தைகள் தயாராக இல்லை என்று உணரும் பெற்றோர்கள் இருக்கலாம்.

எனவே அவர்கள் இன்னும் ஏழு வயதில் முதலாம் வகுப்பில் நுழையலாம்.

ஆனால் இப்போதிலிருந்தே தயாராக இருக்கும் பெற்றோரை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

இதனால் அவர்களின் ஐந்து வயது குழந்தைகள் பாலர் பள்ளியில் சேர முடியும்.

நாங்கள் தற்போது பாலர் பள்ளியில் கவனம் செலுத்தி வருகிறோம்.

முழு பாலர் அமைப்பையும் பொறுப்பேற்று ஒருங்கிணைக்க கல்வி அமைச்சிடம் கேட்டுள்ளோம் என்று அவர் இன்று தேசிய கல்வித் திட்டம் 2026-2035 தொடக்க விழாவில் தனது உரையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset