செய்திகள் மலேசியா
பள்ளி ஆரம்ப உதவித் தொகை; தேசிய கல்வி முறையை வலுப்படுத்துவதற்கான மடானி அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது: டத்தோஸ்ரீ ரமணன்
சுங்கைபூலோ:
பள்ளி ஆரம்ப உதவித் தொகைத் திட்டம் தேசிய கல்வி முறையை வலுப்படுத்துவதற்கான மடானி அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
மனிதவள அமைச்சரும் சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
இன்று மடானி அரசாங்கத்தால் ஆரம்ப பள்ளி உதவித் தொகை வழங்கும் விழாவில் கலந்து கொண்டேன்.
சுபாங் பெஸ்தாரியில் ஆரம்பப் பள்ளியில் நடந்த இவ்விழாவில் மாணவர்களையும் பெற்றோர்களையும் சந்தித்ததில் பெருமைப்படுகிறேன்.
மடானி அரசாங்கத்தின் கீழ் கல்வியமைச்சின் மூலம் இத்திட்டம் கடந்த 2023ஆம் ஆண்டில் 765 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
இது நாடு முழுவதும் 5.1 மில்லியன் மாணவர்களுக்கு பயனளித்துள்ளது.
இந்த ஒதுக்கீடு 2024இல் 788 மில்லியன் ரிங்கிட்டாகவும் பின்னர் 2025 இல் 791 மில்லியனாகவும் அதிகரிக்கப்பட்டது.
இவ்வாண்டு இனம், மதம், பள்ளிப் பிரிவு அல்லது குடும்பப் பின்னணியைப் பொருட்படுத்தாமல், படிவம் 6 மாணவர்கள் உட்பட 5.2 மில்லியனுக்கும் அதிகமான பெறுநர்கள் பயனடையும் வகையில் மடானி அரசாங்கம் இத்திட்டத்தை விரிவுபடுத்தி உள்ளது.
இது அனைத்து மாணவர்களுக்கும் நியாயமான, சமமான கல்வி அணுகலை உறுதி செய்வதில் மடானி அரசாங்கத்தின் கொள்கையை பிரதிபலிக்கிறது.
கடந்த ஜனவரி 11 முதல், ஒவ்வொரு மலேசிய மாணவருக்கும் 150 ரிங்கிட் ஆரம்பப் பள்ளி உதவித் தொகை படிப்படியாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு மொத்த ஒதுக்கீடு 800 மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது. இது அதன் செயல்படுத்தலின் வரலாற்றில் மிக உயர்ந்ததாகும்.
குறிப்பாக இந்த பள்ளியில் மொத்தம் 2,363 மாணவர்கள் இவ்வாண்டுக்கான உதவித் தொகையை பெற்றனர்.
இதன் ஆரம்ப விநியோகம் கிட்டத்தட்ட 355,000 ரிங்கிட் ஆகும்.
2026 பள்ளி அமர்வுக்கான மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு ஏற்ப இந்தத் தொகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒதுக்கீட்டில் இந்த தொடர்ச்சியான அதிகரிப்பு, தேசிய கல்வி முறையை வலுப்படுத்துவதற்கான மடானி அரசாங்கத்தின் வலுவான உறுதிப்பாட்டை தெளிவாக பிரதிபலிக்கிறது.
மேலும் நிதி நெருக்கடி காரணமாக எந்த மலேசியக் குழந்தையும் பள்ளியை விட்டு வெளியேறக்கூடாது என்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இலக்கையும் இத்திட்டம் பூர்த்தி செய்கிறது என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 20, 2026, 5:43 pm
பொன்னம்மாவின் வீட்டுக் கடன் பிரச்சினைக்கு தீர்வுக் காண வங்கிக்கு 5 நாட்கள் கெடு: டத்தோ கலைவாணர்
January 20, 2026, 5:42 pm
6 வயதில் முதலாம் வகுப்பில் சேருவது கட்டாயமில்லை: ஃபட்லினா
January 20, 2026, 4:50 pm
4ஆம் ஆண்டு, படிவம் 3 மாணவர்களுக்கு தேர்வு; அரசாங்கம் அறிமுகப்படுத்தும்: பிரதமர்
January 20, 2026, 4:49 pm
5 வயதில் பாலர் பள்ளி கல்வி; முதலாம் ஆண்டு வகுப்பு 6 வயதில் தொடங்கும்: பிரதமர் அறிவிப்பு
January 20, 2026, 1:59 pm
பாயான் லெபாஸில் ஜாலான் கென்யாலாங்கில் ஏற்பட்ட குழி : 6 நாட்களுக்கு பாதை மூடப்படுகிறது
January 20, 2026, 1:27 pm
தீயில் சிக்கிய 13 வயது சிறுவனை மீட்ட தீயணைப்பு படை
January 20, 2026, 12:03 pm
ஏர் ஆசியா எக்ஸ் பெர்ஹாட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக போ லிங்கம் நியமனம்
January 20, 2026, 11:50 am
