நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாயான் லெபாஸில் ஜாலான் கென்யாலாங்கில் ஏற்பட்ட குழி : 6 நாட்களுக்கு பாதை மூடப்படுகிறது

பெட்டாலிங் ஜெயா:

பினாங்கு மாநிலம் பாயான் லெபாஸில் உள்ள ஜாலான் கென்யாலாங் 1 சாலையோரப் பாதையில் நீண்ட குழி கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இன்று முதல் ஆறு நாட்களுக்கு அந்த பாதை மூடப்படுகிறது.

பொதுப் பணித்துறை, சாலைப் பயனாளர்களின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தது.

மாநில உள்கட்டமைப்பு, போக்குவரத்து, டிஜிட்டல் குழுத் தலைவர் ஜைரில் கீர் ஜோஹாரி, காலை 9.30 மணிக்கு இதனை கண்டறியப்பட்டதாக கூறினார்.

இந்த குழி 2 மீட்டர் நீளமும் , 1.7 மீட்டர் ஆழமும் கொண்டதாக ஜைரில் கூரினார். ஆனாலும் இந்த சாலை குழியினால் முதன்மை சாலை பாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சாலையோர பாதை மட்டும் மூடப்பட்டுள்ள நிலையில், இரு திசைகளிலும் பிளாஸ்டிக் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையில் ஏற்பட்ட குழியின் காரணத்தை கண்டறிய அகழ்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset