நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொன்னம்மாவின் வீட்டுக் கடன் பிரச்சினைக்கு தீர்வுக் காண வங்கிக்கு 5 நாட்கள் கெடு: டத்தோ கலைவாணர்

கோலாலம்பூர்:

பொன்னம்மாவின் வீட்டுக் கடன் பிரச்சினைக்கு தீர்வுக் காண சம்பந்தப்பட்ட வங்கிக்கு 5 நாட்கள் கெடு வழங்குகிறோம்.

நம்பிக்கை இயக்கத்தின் தலைவர்  டத்தோ டாக்டர் கலைவாணர் இதனை வலியுறுத்தினார்.

என் அருகில் அமர்ந்திருக்கும் பொன்னம்மா சுங்கை சிப்புட்டில் வசித்து வருகிறார்.

இவர் 40 ஆயிரம் ரிங்கிட் விலையில் வீடு வாங்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் அவர் மாதந்தோறும் பணம் செலுத்தியுள்ளார்.

அவர் இதுவரை வங்கிக்கு 126,000 ரிங்கிட் செலுத்தியுள்ளார்.

இருந்த போதிலும் அவரின் வங்கி கடன் இன்னும் முடிவடையவில்லை.

மேற்கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு பணம் செலுத்தினால் மட்டுமே கடன் முடியும் என்று சம்பந்தப்பட்ட வங்கி கூறியுள்ளது.

இது பொன்னம்மாவிற்கும் அவரின் கணவருக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

ஆக இப்பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட வங்கி 5 நாட்களுக்கு தீர்வு காண வேண்டும்.

இல்லையென்றால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset