செய்திகள் மலேசியா
பத்துமலை தைப்பூச விழாவை முன்னிட்டு 24 மணி நேரம் கேடிஎம் ரயில் சேவை; இரண்டு நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படும்: அந்தோனி லோக்
கோலாலம்பூர்:
பத்துமலை தைப்பூச விழாவை முன்னிட்டு 24 மணி நேரம் கேடிஎம் ரயில் சேவை, இரண்டு நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் இதனை அறிவித்தார்.
உலக முழுவதும் தைப்பூச விழா வரும் பிப்ரவரி 1ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
மலேசியாவை பொறுத்த வரையில் பத்துமலையில் தைப்பூச விழா மிகவும் விமரிசையாக நடைபெறும்.
இதனால் இவ்விழாவிற்கும் நேர்த்திக் கடனை நிறைவேற்றவும் பக்தர்கள் பத்துமலை முருகன் திருத்தலம் நோக்கிச் செல்வார்கள்.
இதனால் பக்தர்களின் வசதிக்காக கேடிஎம்பி இரயில் சேவை 24 மணி நேரமும் செயல்படும்.
குறிப்பாக இரு தினங்களுக்கு இச்சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
ஜனவரி 30 முதல் பிப்ரவரி 2 வரை 24 மணி நேரமும் சிறப்பு கேடிஎம் சேவைகள் பக்தர்களுக்கு வழங்கப்படும்.
கடந்த ஆண்டு 494 பயணங்களுடன் ஒப்பிடும் போது, இந்த சிறப்பு சேவை நான்கு பகல், மூன்று இரவுகளுக்கு மொத்தம் 609 ரயில் பயணங்களுடன் இயங்கும்.
பிரதான பூலாவ் செபாங் - பத்துமலை, போர்ட் கிள்ளாங் - தஞ்சோங் மாலிம் வழித்தடங்களை உள்ளடக்கிய பத்துமலைக்கு மொத்தம் 216 கூடுதல் ரயில் பயணங்கள் வழங்கப்படும்,
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை சேவை தொடர்ந்து வழங்கப்படும்.
இந்த சிறப்பு சேவை ஜனவரி 30 ஆம் தேதி அதிகாலை 5.32 மணிக்குத் தொடங்கி பிப்ரவரி 2 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடையும்.
குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பயணிகள் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 1 வரை இரண்டு நாட்களுக்கு இலவசக் கட்டணங்களை அனுபவிப்பார்கள்.
இந்த இரண்டு நாட்களுக்கு, இலவச பயணக் கட்டணங்களுக்கு அரசாங்கம் கிட்டத்தட்ட 1 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
இது பயணிகளின் குறிப்பாக பத்துமலை செல்வோரின் இயக்கத்தை எளிதாக்கும்.
ஆக பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாப்புடன் பயணம் செய்து பத்துமலை முருகன் திருத்தலம் வரை செல்ல இலவச ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 20, 2026, 1:59 pm
பாயான் லெபாஸில் ஜாலான் கென்யாலாங்கில் ஏற்பட்ட குழி : 6 நாட்களுக்கு பாதை மூடப்படுகிறது
January 20, 2026, 1:27 pm
தீயில் சிக்கிய 13 வயது சிறுவனை மீட்ட தீயணைப்பு படை
January 20, 2026, 12:03 pm
ஏர் ஆசியா எக்ஸ் பெர்ஹாட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக போ லிங்கம் நியமனம்
January 20, 2026, 11:50 am
நெடுஞ்சாலையில் லாரி விபத்து: இருவர் உயிரிழப்பு
January 20, 2026, 9:19 am
ரஹ்மா உதவித் தொகை இன்று முதல் விநியோகிக்கப்படும்: நிதியமைச்சு
January 20, 2026, 9:07 am
தகவல்களைப் பெற எம்ஏசிசி, வருமான வரி அதிகாரிகள் அலுவலகத்திற்கு வந்ததை ஐஜேஎம் நிறுவனம் உறுதிப்படுத்தியது
January 20, 2026, 9:00 am
நீலாய் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கப்பட்டது: டத்தோ சரவணக்குமார்
January 20, 2026, 8:56 am
