நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

4ஆம் ஆண்டு, படிவம் 3 மாணவர்களுக்கு தேர்வு; அரசாங்கம் அறிமுகப்படுத்தும்: பிரதமர்

புத்ராஜெயா:

2026ஆம் ஆண்டில் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும் 2027 ஆம் ஆண்டில் மூன்றாம் படிவம் மாணவர்களுக்கும் புதிய மதிப்பீட்டு தேர்வை அரசாங்கம் அறிமுகப்படுத்தும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

இந்த ஆண்டு முதல் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு முக்கிய பாடங்களான மலாய், ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகியவற்றிற்கு  மதிப்பீட்டு சோதனை அரசாங்கம் செயல்படுத்தும்.
அதே வேளையில் படிவம் 3 மாணவர்களுக்கு மலாய், ஆங்கிலம், கணிதம், அறிவியல்,  வரலாறு ஆகிய ஐந்து முக்கிய பாடங்களுக்கான மதிப்பீட்டு சோதனை அறிமுகம் செய்யப்படும்

இந்த மதிப்பீட்டு சோதனை  2027இல் தொடங்கும் என்று பிரதமர் கூறினார்.

இந்த இரண்டு மதிப்பீடு சோதனைகளும் தேர்வு வாரியத்தால்  மையமாக நிர்வகிக்கப்படும்.

இந்த அளவீட்டிற்கான மற்றொரு பெயர் மலேசிய கற்றல் மேட்ரிக்ஸ் என்று அவர் இன்று தேசிய கல்வித் திட்டம் 2026 - 2035 வெளியீட்டு விழாவில் தனது உரையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset