நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஏர் ஆசியா எக்ஸ் பெர்ஹாட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக போ லிங்கம் நியமனம்

சிப்பாங்:

ஏர் ஆசியா எக்ஸ் பெர்ஹாட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக  போ லிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏர் ஆசியா குழுமம் விமானப் போக்குவரத்து வணிகத்தை மறுசீரமைப்பதன் ஒரு பகுதியாக ஏர் ஆசியா எக்ஸ் பெர்ஹாட்  தலைமை நிர்வாக அதிகாரி பென்யமின் இஸ்மாயிலை இன்று முதல் பொது தலைமை நிர்வாகியாக நியமித்துள்ளது.

2010 மார்ச் மாதத்தில் ஏர் ஆசியாவில் சேர்ந்த 48 வயதான பென்யமின், 2015 செப்டம்பர் 1ஆம் தேதி முதல்  தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

அவரின் தலைமையில் ஏர் ஆசியா எக்ஸ் நல்ல வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அடைந்தது.

இந்நிலையில் போ லிங்கம் என்று அழைக்கப்படும் தர்மலிங்கம் தற்போது ஏர் ஆசியா எக்ஸ் பெர்ஹாட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக  நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு ஏர் ஆசியாவில் சேர்ந்தார்.

ஏர் ஆசியா விமானக் குழுமத்தின் மூலோபாய திசை, செயல்பாட்டு கட்டமைப்பை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

புர்சா மலேசியாவிற்கு தாக்கல் செய்த அறிக்கையில் அந்நிறுவனம் இதனை தெரிவித்தது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset