நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

6 வயதில் முதலாம் வகுப்பில் சேருவது கட்டாயமில்லை: ஃபட்லினா

புத்ராஜெயா:

ஆறு வயது குழந்தைகளை முதலாம் வகுப்பில் சேர்ப்பது கட்டாயமில்லை.

குறிப்பாக உளவியல், உணர்ச்சி ரீதியாக உண்மையிலேயே தயாராக இருக்கும் பெற்றோர்கள், குழந்தைகள் மட்டுமே இதில் ஈடுபடுவார்கள்.

போதுமான தயார் நிலையில் இல்லாமல் குழந்தைகள் மிக விரைவாக பள்ளியில் சேர்க்கப்பட்டால், அவர்களின் ஆரம்பகால வளர்ச்சியில் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்கப்பட வேண்டும்.

இதன் அடிப்படையில் கல்வியமைச்சு மாணவர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.

தயாராக இருக்கும் பெற்றோரை மட்டுமே நாங்கள் ஊக்குவிக்கிறோம். மிக முக்கியமாக குழந்தையே தயாராக இருக்க வேண்டும்.

குழந்தை மன ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் தயாராக இல்லை என்றால், அது அவர்களின் வளர்ச்சியை பாதிக்க நாங்கள் விரும்பவில்லை.

இன்று புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற தேசிய கல்வித் திட்டம் 2026–2035 தொடக்க விழாவிற்குப் பிறகு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset