நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெடுஞ்சாலையில் லாரி விபத்து: இருவர் உயிரிழப்பு

கோலாலம்பூர்: 

செத்தியாவாங்சா–கடற்கரை  நெடுஞ்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட கோர விபத்தில், ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து கான்கிரீட் தடுப்பில் மோதியதில், ஓட்டுநரும் அவரது உதவியாளரும் உயிரிழந்தனர்.

கோலாலம்பூர் தீயணைப்பு மீட்புத்துறை மையம் இரவு 8.55 மணிக்கு அவசர அழைப்பு பெற்றதாக, மூத்த தீயணைப்பு அதிகாரி நூர் சஹேலா முகமது ஜைனல் தெரிவித்தார். புடு தீயணைப்பு நிலையத்திலிருந்து ஒன்பது பேர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

விபத்தில், லாரியில் பயணித்த இருவரும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சுகாதார அமைச்சின் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் உறுதிப்படுத்தினர். உடல்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதே சம்பவத்தில், அருகிலுள்ள கட்டுமான தளத்தில் பணியில் இருந்த ஒரு கிரேன் சம்பந்தமான மற்றொரு விபத்தும் ஏற்பட்டது. இதில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கால் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset