நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீயில் சிக்கிய 13 வயது சிறுவனை மீட்ட தீயணைப்பு படை

பூச்சோங்:

பங்சாபுரி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய சிறுவனை பாதுகாப்பாக தீயணைப்பு படை மீட்டெடுத்தது.

பங்சாபுரி ஸ்ரீ புலாய் குடியிருப்பு வளாகத்தின் மூன்றாம் மாடியில் உள்ள ஒரு குடியிருப்பு இன்று காலை தீப்பிடித்தது. அதில் சிக்கியிருந்த 13 வயது சிறுவனை தீயணைப்பு மீட்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு பாதுகாப்பாக மீட்டனர்.

சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத்துறையின் செயல்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறுகையில், காலை 6.59 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகவும், 7.09 மணிக்கு சம்பவ இடத்தை அடைந்ததாகவும் தெரிவித்தார்.

பூச்சோங், சைபர்ஜெயா தீயணைப்பு நிலையங்களில் இருந்து எட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்தபோது, மூன்றாம் மாடியில் உள்ள ஒரு குடியிருப்பு சுமார் 80 சதவீதம் தீக்கிரையாகியிருந்தது. அந்த குடியிருப்பின் ஒரு அறையில் சிக்கியிருந்த சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அவர் கூறினார்.

தீயை காலை 7.33 மணிக்கு முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset