நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மனைவியைப் பிரிந்தார் தனுஷ்: காரணம் தெரியவில்லை; திரையுலகத்தினர் அதிர்ச்சி

சென்னை:

நடிகர் தனுஷ் தன் மனைவியும் நடிகர் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்திருப்பது திரையுலக வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் திடீர்ப் பிரிவுக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

நேற்று இரவு இந்தத் தகவலை தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார் தனுஷ். இதேபோல் ஐஸ்வர்யாவும் பதிவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தனுஷ் திரையுலகில் மெல்ல முன்னேறி வந்த நிலையில், அவருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு கடந்த கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை விட ஒரு வயது மூத்தவர். இத்தம்பதியர்க்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.

Proud daughter, Proud wife': Aishwarya R Dhanush drops picture of  Rajinikanth & Dhanush with their awards | PINKVILLA

இன்று திரையுலகில் தமக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளார் தனுஷ். மேலும், சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, சில வெற்றிப் படங்களையும் தயாரித்துள்ளார்.

இடையே, தன் மனைவி ஐஸ்வர்யா திரையுலகில் இயக்குநராகக் கால்பதிக்க ஆதரவும் ஊக்கமும் அளித்த வகையில், தனுஷை திரையுலகத்தினர் வெகுவாகப் பாராட்டி வந்தனர். ரஜினியும் அவர்களில் ஒருவர்.

இந்நிலையில், மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக தனுஷ் அறிவித்துள்ளார்.

தமது சமூக வலைத்தளப் பதிவில், கடந்த 18 ஆண்டுகளாக நண்பர், தம்பதி, பெற்றோர் மற்றும் நலம் விரும்பியாக இருந்துள்ளோம். எங்கள் வாழ்க்கை பயணம் பல புரிதல்களோடு நெடுந்தூர பயணமாக இருந்தது.

"இன்று முதல் எங்களுடைய பயணம் வெவ்வேறாக இருப்பதாக முடிவு செய்து இருக்கிறோம். நானும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து முடிவு எடுத்து இருக்கிறோம். எங்கள் முடிவுக்கு மதிப்பு அளிக்கக் கொள்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார் தனுஷ்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset