நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்

சென்னை: 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா தனது இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.

தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், ஜெயம்ரவி, ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்த நயன்தாரா, இடையில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.

நயன்தாரா நேற்று தனது 41-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளுக்கு அவரது கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் ரோல்ஸ் ராய்ஸ் black badge spectre காரை பரிசாக வழங்கியிருக்கிறார்.

இதுதொடர்பான புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். " எண்ணம்போல் வாழ்க்கை. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உயிர். நீ பிறந்த தினம் வரம். உன்னை உண்மையாக, ஆழமாக நேசிக்கிறேன். வாழ்கையில் சிறந்த தருணங்களைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset