நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிசம்பர் 27ஆம் தேதி ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா: மலேசியா வருகிறார் விஜய்

கோலாலம்பூர்:

நடிகர் விஜய் அடுத்த மாதம் டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவுக்கு வருகிறார்.

நடிகர் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் படம் அடுத்த வருடம் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.


இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்பு படத்தின் முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற சூழலில் இப்போது புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டிருக்கிறது.

இது ஒருபக்கம் இருக்க படத்தின் ஆடியோ வெளியீட்டு எங்கே, எப்போது நடக்கும் என்ற ஆவலும் இருந்தது.

இந்நிலையில் அதுகுறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டிருக்கிறது.

அதன்படி ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழா டிசம்பர் 27ஆம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் புக்கிட் ஜாலில் அரங்கத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேவிஎன் புரொடக்சன் நிறுவனம் இதை அறிவித்துள்ளது.

அதே வேளையில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்த அறிவிப்பு வீடியோவில் மலேசிய வாழ் விஜய் ரசிகர்கள் அவரை பற்றி எமோஷனலாக பேசும் காட்சிகளும் இருக்கின்றன.

முன்னதாக, திமுகவை தொடர்ந்து விஜய் அட்டாக் செய்து வருவதால் ஆளுங்கட்சி சார்பில் ஜனநாயகன் படத்துக்கும், அதன் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கும் அழுத்தம் வரலாம்.

எனவே வெளிநாட்டில் நடத்த விஜய் திட்டமிட்டிருக்கிறார் என்று தகவல்கள் வந்தன.

இப்போது வந்திருக்கும் அறிவிப்பு அவை அனைத்தும் உண்மைதான் என்பதை உறுதி செய்திருக்கிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset