செய்திகள் மலேசியா
நம்பிக்கை கூட்டணி - தேசிய முன்னணி இடையே மலாக்கா மாநில தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை: பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்
கோலாலம்பூர்:
மலாக்கா மாநில தேர்தலில் நம்பிக்கை கூட்டணி - தேசிய முன்னணி கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்த பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த தகவலைத் தெரிவித்தார்.
இப்பேச்சுவார்த்தைக் குழுவிற்கு நம்பிக்கை கூட்டணி தேர்தல் இயக்குநர் டத்தோஸ்ரீ அமீருடின் ஷாரியும், நம்பிக்கை கூட்டணி தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலும் தலைமை தாங்குவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, மலாக்கா முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப் அப்துல் ரவூஃப் யூசோப்புடன் நடத்தப்படும் மேல்முறைப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், தேசிய முன்னணி கூட்டணியுடன் இணைந்து செயல்பட நம்பிக்கை கூட்டணி தயார் நிலையில் உள்ளதாகவும் சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்திருந்தார்.
மலாக்கா மாநிலச் சட்டமன்றத்தின் பதவிக்காலம் நடப்பாண்டின் இறுதியில் முடிவடைவதைத் தொடர்ந்து, அங்கு விரைவில் மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 20, 2026, 6:47 pm
தாபோங் ஹாஜி, பெல்டா மீதான அரசு விசாரணை ஆணையம்; அரசியல் பழிவாங்கல் அல்ல: பிரதமர்
August 20, 2026, 6:47 pm
புகைமூட்டம்: சரவாக்கில் 591 பள்ளிகள் இன்றும் நாளையும் மூடப்பட்டன
August 20, 2026, 6:46 pm
கோத்தா டாமன்சாராவில் கட்டப்படவிருந்த தரவு மையத் திட்டம் ஒத்திவைப்பு: டத்தோஶ்ரீ ரமணன்
August 20, 2026, 6:44 pm
மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எண்ணெய் பூஜை எண்ணெயாக மாறுகிறது
August 20, 2026, 6:42 pm
பெர்லிஸ் மாநிலத்தில் வீரகாளியம்மன் ஆலயம் உடைப்பு: பொது இயக்கங்கள் கண்டனம்
August 20, 2026, 5:42 pm
AUKU சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை: இந்த ஆண்டிற்குள் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்
August 20, 2026, 5:37 pm
பேராக் மாநில மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் ராஜினாமா: சராணி முஹம்மத் உறுதிப்படுத்தினார்
August 20, 2026, 5:23 pm
