நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்லிஸ் மாநிலத்தில் வீரகாளியம்மன் ஆலயம் உடைப்பு: பொது இயக்கங்கள் கண்டனம்

ஈப்போ:

பெர்லிஸ் மாநிலம் கங்கார் அருகே புக்கிட் லாகியில் உள்ள வீரகாளியம்மன் ஆலயம் இன்று இடிக்கப்பட்டதற்கு சமுக அமைப்புகள், இந்து சங்கம் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஆலய பிரச்சனைகளுக்கு சுமுகமான முறையில் தீர்வுக்காணகப்படவேண்டும் அதை விடுத்து இடித்து சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம் என்று மாநில மஜ்லிஸ் பிம்பினான் இயக்கத்தின் துணைத் தலைவர் வழக்கறிஞர் பால்டிப் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது போன்ற உணர்வுப்பூர்வமான விவகாரங்களுக்கு வன்முறையைப் பயன்படுத்தாமல், அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான முறையில் தீர்வு காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இத்தகைய சம்பவங்கள் நாட்டின் அமைதி, பல இன மக்களிடையே
ஒற்றுமையைப் பாதிக்கக்கூடும் என்றும், 2008ஆம் ஆண்டுக்கு முன்பு சிலாங்கூரில் நடைபெற்ற ஆலய இடிப்பு சம்பவங்களை நினைவூட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு மாறாக, பேரா மாநிலத்தில் நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி கூட்டணி அரசின் கீழ், வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு சட்டத்திற்கு உட்பட்டு ஒழுங்கான முறையில் தீர்வு காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதே போல் பேரா அரசின் நடவடிக்கை முன்னுதரமான வைத்து அதன் நடவடிக்கையை பெர்லிஸ் மாநிலம் மேற்கொள்ள வேண்டும் என்று பேரா இந்து சங்கத் தலைவர் பொன். சந்திரன் வலியுறுத்தினார்

குறிப்பாக, சட்டப்பூர்வ அனுமதியின்றி செயல்படும் ஆலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பேரா மாநில அரசு, உயர்ந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

சட்டத்தை மதிக்கும் வகையிலும், அனைத்து தரப்பினருக்கும் சாதகமான தீர்வை ஏற்படுத்தும் வகையிலும் பேரா மாநில அரசு குறிப்பாக அதன் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் மேற்கொண்டு வரும் அணுகுமுறை பாராட்டுக்குரியது என்றும் சந்திரன் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset