நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும்: முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், மக்கள் கோரிக்கை

செமினி:

ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி அமைந்துள்ள நிலம் தேசிய நில நிதி கூட்டுறவு நிறுவனத்திற்கு சொந்தமானது.

பள்ளி நிலம் அமைந்து நிலத்துடன் பல ஏக்கர் நிலம் மேம்பாட்டு நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளது..

இதனால் ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி கிட்டத்தட்ட 3 ஏக்கர் நிலத்திற்குள் புதியதாக கட்டித் தர தேசிய நில நிதி கூட்டுறவு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஆனால் அனைத்து வசதிகளுடன் புதிய பள்ளியை கட்டுவதற்கு இந்த நிலம் போதுமானதாக இருக்காது.

இதன் அடிப்படையில் தான் பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும். இந்த நிலத்தில் அனைத்து வசதிகளுடன் பள்ளியை கட்டலாம் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

எங்களின் கோரிக்கைக்கு எந்தவொரு முடிவும் கிடைக்கவில்லை. இதனால் இன்று கண்டன ஆர்பாட்டத்தை நடத்துவதாக் இக்குழுவைச் சேர்ந்த நாகலிங்கம் கூறினார்.

ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இப்போது இருக்கும் பள்ளி மீது யாரும் கைவைக்கக்கூடாது. இது தான் எங்களின் கோரிக்கையாகும்.

எங்களின் கோரிக்கைக்கு அடுத்த 14 நாட்களுக்கு கிடைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset