செய்திகள் மலேசியா
கோத்தா டாமன்சாராவில் கட்டப்படவிருந்த தரவு மையத் திட்டம் ஒத்திவைப்பு: டத்தோஶ்ரீ ரமணன்
சுங்கைபூலோ:
கோத்தா டாமன்சாராவில் தரவு மையம் கட்டுவதற்கான திட்டத்தை முன்னெடுத்த நிறுவனம், பெட்டாலிங் ஜெயா மாநகர மன்றத்திடம் சமர்ப்பித்திருந்த திட்ட அனுமதி விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றதால், இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ஆர். ரமணன், இவ்விஷயம் குறித்த சமீபத்திய தகவலை மாநகர் மன்றத்திடம் இருந்து பெற்றதாகக் கூறினார்.
ஆரம்பத்திலிருந்தே எனது நிலைப்பாடு தெளிவாக உள்ளது. நான் வளர்ச்சி அல்லது முதலீட்டிற்கு எதிரானவன் அல்ல, ஆனால் உள்ளூர் மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய பெரிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு, மக்களின் கருத்துக்களைக் கேட்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
மக்கள் தங்களின் நியாயமான கவலைகளை வெளிப்படுத்தும் போது, ஒரு பிரதிநிதியாக அவர்களின் குரல்களை அதிகாரிகளிடம் கொண்டு சேர்ப்பது எனது பொறுப்பாகும்.
மக்களின் நலன் என்று வரும்போது, நாம் சமரசம் செய்துகொள்ள முடியாது என்று அவர் கூறினார்.
உள்ளூர்வாசிகள் எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து, முன்மொழியப்பட்ட தரவு மையத் திட்டம் அமைச்சரவையின் விவாதத்திற்குக் கொண்டு வரப்படும் என்று ஜூலை 17 அன்று டத்தோஶ்ரீ ரமணன் கூறியிருந்தார்.
சுற்றுச்சூழல், சமூக அக்கறைகள் காரணமாக இந்தத் திட்டத்தை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தி, குடியிருப்பாளர்கள் மாநகர் மன்றததிற்கு ஒரு மனுவைச் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, ஜூலை 27 அன்று திட்டத்திற்கான ஆட்சேபனைகள் தீவிரமடைந்தன.
ஜாஹ்ரிக்கு அனுப்பப்பட்ட அந்த மனுவை, கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் இசுவான் காசிம், குடியிருப்பாளர்கள், உள்ளூர் கவுன்சிலர்கள் மற்றும் ரமணன் ஆகியோருடன் இணைந்து சமர்ப்பித்தார்.
முன்மொழியப்பட்ட மேம்பாட்டுத் தளத்திற்கு மிக அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்களிடமிருந்து மட்டும் இந்த ஆட்சேபனைகள் வரவில்லை என்றும், மாறாக பரந்த சமூகத்தின் அக்கறைகளையும் இது பிரதிபலிப்பதாகவும் இசுவான் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 20, 2026, 6:47 pm
தாபோங் ஹாஜி, பெல்டா மீதான அரசு விசாரணை ஆணையம்; அரசியல் பழிவாங்கல் அல்ல: பிரதமர்
August 20, 2026, 6:47 pm
புகைமூட்டம்: சரவாக்கில் 591 பள்ளிகள் இன்றும் நாளையும் மூடப்பட்டன
August 20, 2026, 6:44 pm
மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எண்ணெய் பூஜை எண்ணெயாக மாறுகிறது
August 20, 2026, 6:42 pm
பெர்லிஸ் மாநிலத்தில் வீரகாளியம்மன் ஆலயம் உடைப்பு: பொது இயக்கங்கள் கண்டனம்
August 20, 2026, 5:42 pm
AUKU சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை: இந்த ஆண்டிற்குள் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்
August 20, 2026, 5:37 pm
பேராக் மாநில மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் ராஜினாமா: சராணி முஹம்மத் உறுதிப்படுத்தினார்
August 20, 2026, 5:23 pm
