செய்திகள் மலேசியா
AUKU சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை: இந்த ஆண்டிற்குள் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்
கோலாலம்பூர்:
1971ஆம் ஆண்டின் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்வதற்கான மசோதா இந்த ஆண்டு மக்களவையில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுடனான சந்திப்பின் போது உரையாற்றிய பிரதமர், இந்தச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தை அமைச்சரவையிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
பல்கலைக்கழக நிர்வாகங்கள் தங்களின் சுயாதீனமான செயல்பாடுகளுக்கு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த ரத்து மசோதா வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்படும் என்று நம்பிக்கை தெரிவித்த அன்வார், இதன் மூலம் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கான சுதந்திரமும் ஜனநாயகப் பாதையும் மேலும் பலப்படுத்தப்படும் என்றார்.
அயூகியூ சட்டம் ரத்து செய்யப்படுவதன் மூலம், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், ரெக்டர்கள் மற்றும் புலங்களின் தலைவர்கள் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் கூடுதல் பொறுப்புடனும் சுயாட்சியுடனும் செயல்பட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 20, 2026, 6:47 pm
தாபோங் ஹாஜி, பெல்டா மீதான அரசு விசாரணை ஆணையம்; அரசியல் பழிவாங்கல் அல்ல: பிரதமர்
August 20, 2026, 6:47 pm
புகைமூட்டம்: சரவாக்கில் 591 பள்ளிகள் இன்றும் நாளையும் மூடப்பட்டன
August 20, 2026, 6:46 pm
கோத்தா டாமன்சாராவில் கட்டப்படவிருந்த தரவு மையத் திட்டம் ஒத்திவைப்பு: டத்தோஶ்ரீ ரமணன்
August 20, 2026, 6:44 pm
மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எண்ணெய் பூஜை எண்ணெயாக மாறுகிறது
August 20, 2026, 6:42 pm
பெர்லிஸ் மாநிலத்தில் வீரகாளியம்மன் ஆலயம் உடைப்பு: பொது இயக்கங்கள் கண்டனம்
August 20, 2026, 5:37 pm
பேராக் மாநில மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் ராஜினாமா: சராணி முஹம்மத் உறுதிப்படுத்தினார்
August 20, 2026, 5:23 pm
