செய்திகள் மலேசியா
மலாக்கா மாநிலத் தேர்தல்: புதிய அரசியல் கூட்டணி குறித்து அம்னோ உச்சமன்றம் முடிவெடுக்கும்
மலாக்கா:
மலாக்கா மாநில தேர்தலை முன்னிட்டு புதிய அரசியல் கூட்டணி தொடர்பாக அம்னோ உச்சமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோஅஹ்மத் மஸ்லான் கூறினார்.
அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமத் ஜாஹித் ஹமிடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மலாக்கா தேர்தலில் தேசிய முன்னணி கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வதற்கான முக்கிய உத்திகள் குறித்து தீவிரமாக ஆராயப்படும்.
ஒவ்வொரு மாநிலத்தின் அரசியல் சூழல் மற்றும் பொருத்தத்திற்கு ஏற்பவே BN கூட்டணி தனது அணுகுமுறையை வகுக்கும். எனவே, கட்சியின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தேசிய முன்னணி கடந்த நெகிரி செம்பிலான், ஜொகூர் மாநில தேர்தல்களில் மகத்தான வெற்றிப்பெற்று மாநில அரசாங்கத்தை அமைத்தது.
ஸ்ரீ நெகரியில் நடைபெற்ற மக்கள் உள்கட்டமைப்பு திட்டக் கண்காணிப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் இத்தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 20, 2026, 6:47 pm
தாபோங் ஹாஜி, பெல்டா மீதான அரசு விசாரணை ஆணையம்; அரசியல் பழிவாங்கல் அல்ல: பிரதமர்
August 20, 2026, 6:47 pm
புகைமூட்டம்: சரவாக்கில் 591 பள்ளிகள் இன்றும் நாளையும் மூடப்பட்டன
August 20, 2026, 6:46 pm
கோத்தா டாமன்சாராவில் கட்டப்படவிருந்த தரவு மையத் திட்டம் ஒத்திவைப்பு: டத்தோஶ்ரீ ரமணன்
August 20, 2026, 6:44 pm
மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எண்ணெய் பூஜை எண்ணெயாக மாறுகிறது
August 20, 2026, 6:42 pm
பெர்லிஸ் மாநிலத்தில் வீரகாளியம்மன் ஆலயம் உடைப்பு: பொது இயக்கங்கள் கண்டனம்
August 20, 2026, 5:42 pm
AUKU சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை: இந்த ஆண்டிற்குள் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்
August 20, 2026, 5:37 pm
